close
Choose your channels

அஸ்வினின் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவு: இயக்குனர் யார் தெரியுமா?

Monday, January 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் அஸ்வின் நடித்த ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு சுமாரான வெற்றியைப் பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அஸ்வின் அடுத்த திரைப்படத்தையும் சத்தமில்லாமல் நடித்து முடித்து விட்டார். அஸ்வின் நடித்த அடுத்த படத்தை இயக்குனர் பிரபுசாலமன் இயக்கி முடித்து உள்ளார் என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ’கும்கி 2’ என்ற படத்தை இயக்கி வரும் பிரபுசாலமன் அஸ்வின் நடித்து வரும் படத்தை இயக்கி உள்ளார் என்றும் இந்த படமும் பழங்குடியின மக்களின் கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

’என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அஸ்வினுக்கு இந்த படம் கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக வெற்றியை ருசிக்காத பிரபுசாலமன் இந்த படத்தின் மூலம் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் டீசர், டிரைலர் உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.