close
Choose your channels

ஓட்டு போட்ட 'குக் வித் கோமாளி' பிரபலங்கள்! வைரல் புகைப்படங்கள்!

Tuesday, April 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு என்பதும் தெரிந்ததே. வரும் சனி ஞாயிறு இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது என்பதும் இந்த இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகியவர்களில் பட்டம் வெல்வது யார் என்பது வரும் ஞாயிறு அன்று தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து அரசியல்வாதிகள் திரையுலக பிரபலங்கள் உள்பட பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில் குக் வித் கோமாளி பிரபலங்களும் ஓட்டு போட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஹீரோ என்று கூறப்படும் அஸ்வின் தனது வாக்கை கோவையில் உள்ள வாக்குச்சாவடியில் செலுத்தியுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் இந்த நிகழ்ச்சியின் நடுவரான செஃப் தாமு அவர்களும் தனது ஜனநாயக கடமையை ஆற்றி அதன் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னர் என்று எதிர்பார்க்கப்படும் கனி, தனது தந்தை அகத்தியன் மற்றும் தனது சகோதரிகள் விஜயலட்சுமி, நிரஞ்சனாவுடன் ஓட்டு போட்டதன் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

அதேபோல் இந்த நிகழ்ச்சியின் கோமாளிகளின் ஒருவரான சக்தியும் வாக்களித்ததை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.