ஏ.ஆர்.ரஹ்மான் வாக்கு பலித்தது: திரைப்படத்தில் அறிமுகமாகிறார் 'குக் வித் கோமாளி' அஸ்வின்!

மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நேற்று நடைபெற்ற போது ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் போட்டியாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது நேற்றைய நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்

அப்போது ஏஆர் ரஹ்மான் அவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்த போது ’அஸ்வின் நீங்கள் எப்போது படத்தில் நடிக்க போகிறீர்கள்’ என்று கேட்டார். அதற்கு அஸ்வின் ’உங்களுடைய இந்த வார்த்தை ஒன்றே போதும், நான் கண்டிப்பாக ஜெயித்து விடுவேன், என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்

இந்த நிலையில் நேற்று ஏஆர் ரஹ்மான் அவர்கள் அஸ்வினிடம் திரைப்பட வாய்ப்பு குறித்து கேட்ட நிலையில் தற்போது அஸ்வின் ஒரு திரைப்படத்தில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அஸ்வின் நடிக்கவிருக்கும் படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் அஸ்வினுடன் ’குக் வித் கோமாளி’ பிரபலம் புகழ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,

More News

கர்ணன் திரைப்படம்- அதிருப்தி குரலுக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி ஸ்டாலின்!

இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாகி தற்போது ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் “கர்ணன்”.

'குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர் கனிக்கு இத்தனை லட்சம் பரிசுத்தொகையா?

விஜய் டிவியில் பரபரப்பாக கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பப்பட்டு வந்த 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

தனுஷின் 'கர்ணன்': மாரி செல்வராஜின் மாற்றத்திற்கு உதயநிதி அதிருப்தியா?

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் கடந்த 1995ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்தது என்றும் ஆனால் 1997ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடந்தது போல்

சி.எஸ்.அமுதன் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்: மீண்டும் 'ஸ்ஃபுப்' படமா?

'தமிழ்ப்படம்' மற்றும் 'தமிழ் படம் 2.0' ஆகிய இரண்டு 'ஸ்ஃபுப்' படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன், இரண்டு படங்களையும் வெற்றி படமாக்கினார் என்பதும் ரசிகர்கள்

வீர்ம்ன்னா என்னன்னு தெரியுமா? ரசிகருக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் ஜூலி!

வீரம் என்றால் என்ன என்று தெரியுமா? என ரசிகர் ஒருவரின் கமெண்டுக்கு பிக்பாஸ் ஜூலி பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது