close
Choose your channels

'குக் வித் கோமாளி' அஸ்வின் முதல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Wednesday, October 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி சீசன் 2’ என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’குக்’களான அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி ஆகியோருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதும் அதேபோல் கோமாளிகளான புகழ், ஷிவாங்கி, பாலா, தங்கதுரை ஆகியோருக்கும் மிக அதிக அளவில் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றியே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அஸ்வின் ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் அவர்கள் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஹரிஹரன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் விவேக்-மெர்வின் இசையமைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று காலை இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது என்பதும் அஸ்வினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos