close
Choose your channels

விஜய் டிவியில் இருந்து ஜீடிவிக்கு சென்ற 'குக் வித் கோமாளி' அஸ்வின்!

Saturday, April 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிய ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் பைனல் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’குக்’களும், சரி கோமாளிகளும் சரி வேற லெவலில் பிரபலம் ஆகி விட்டார்கள். இதில் கலந்து கொண்ட அனைவருமே ஏற்கனவே தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இந்த நிகழ்ச்சி தான் அவர்களுக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அஸ்வினுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் கிடைத்தார்கள் என்பதும் அதனை பயன்படுத்திக் கொண்டு அவர் சமீபத்தில் வெளியிட்ட ஆல்பம் ஒன்று மிகப் பெரிய அளவில் வைரலாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி முடிந்து விட்டது என்பதும் அதில் கனி டைட்டில் பட்டத்தை வென்றார் என்றும் ஷகிலா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன

இந்த நிலையில் விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து தற்போது ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றின் புரமோ வீடியோவில் அஸ்வின் நடித்துள்ளார். இந்த வீடியோவில் ’ஜி திரை பிரீமியர் லீக்’ என்ற நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோவில் அவர் நடித்துள்ளதை அடுத்து அடுத்தடுத்து ஜீ டிவியில் சில நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி திரைப்பட வாய்ப்புகளும் அஸ்வினுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் அவர் நடிக்கயிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.