close
Choose your channels

ஷிவாங்கியின் முதல் தமிழ் திரைப்படம்: மாஸ் நடிகருக்கு தங்கையா?

Wednesday, February 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக புகழ் மற்றும் ஷிவாங்கியின் அண்ணன் தங்கை பாசம், அஸ்வின் மற்றும் ஷிவாங்கியின் ரொமான்ஸ் காட்சிகள் இந்த நிகழ்ச்சியை சுவராசியமாக கொண்டு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏற்கனவே புகழ் ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். நிலையில் தற்போது ஷிவாங்கியின் முதல் படம் தமிழ் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படமான ’டான்’ என்ற திரைப்படத்தில் தான் ஷிவாங்கி நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிவாங்கி மட்டுமின்றி ஆர்ஜே விஜய், முனிஸ்காந்த் மற்றும் காளி வெங்கட் ஆகியோர்களும் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் முக்கிய கேரக்டர்களில் சமுத்திரக்கனி மற்றும் சூரி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

சிபி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.