close
Choose your channels

10 ஆண்டுகளுக்கு முன் காளையன் இப்படியா இருந்தார்? ஆச்சரிய புகைப்படங்கள்..!

Monday, March 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் கடந்த சில வாரங்களாக இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் தெரிந்தது. இந்த நிகழ்ச்சியில் 10 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கிஷோர் மற்றும் காளையன் ஆகிய இருவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளதால், தற்போது 8 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் எலிமினேட் ஆன காளையன் இளமை கால புகைப்படங்கள் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காளையன் தமிழ் சினிமாவில் ’சுல்தான்’ ’ஜிகர்தண்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் வில்லன் வேடத்தில் கலக்குவார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் திரையில் டெரர்ராக காணப்படும் காளையன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜாலியாக இருந்தார் என்பதும் குறிப்பாக புகழ் மற்றும் ஜிபி முத்துவை அடிப்பதும் கலாய்ப்பதும் பார்வையாளர்களுக்கு செம என்டர்டைனிங் ஆக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஷிவாங்கியிடம் காளையன் பேசிக் கொண்டிருந்தபோது தான் இளமையாக இருக்கும் போது பல பெண்கள் தன்னை காதலித்ததாகவும், ஆனால் தான் காதலித்த பெண்கள் அனைவருக்கும் வேறு ஒருவருடன் திருமணம் ஆகி விடுவதால் இதுவரை திருமணம் செய்யாமல் இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார். அப்போது ஷிவாங்கி நான் உங்களுக்கு ஒரு நல்ல பெண் பார்க்கிறேன் என்று கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.