மணிமேகலை வீட்டில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்: போலீஸில் புகார்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெறும் மணிமேகலையின் வீட்டில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

குக் வித் கோமாளி உள்பட விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் மணிமேகலை. இவர் முகமது உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் தன்னுடைய உழைப்பில் கிடைத்த பணத்தில் முதல் முதலாக தனது காதலருக்கு விலை உயர்ந்த கேடிஎம் பைக் வாங்கி கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பைக்கை அசோக் நகரில் உள்ள தனது நண்பரின் வீட்டில் நிறுத்தி இருந்த நிலையில் இன்று அதிகாலை அந்த பைக் காணாமல் போனதாக தெரிகிறது. இதனை அடுத்து மணிமேகலை அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பைக் திருடு போன வீட்டில் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .

இதுகுறித்து மணிமேகலை தனது சமூக வலைத்தளத்தில், ‘இன்று அதிகாலை எங்களது பைக் தொலைந்துவிட்டது. திருமணத்திற்கு பிறகு கஷ்டப்பட்டு சம்பாதித்த காசில் ஆசை ஆசையாக வாங்கிய முதல் பைக், வருத்தமாக இருக்கிறது. வருஷத்துக்கு ஒரு தரம் எங்கிருந்துதான் வருமோ’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

More News

'கேஜிஎப்' ராக்கி பாய்க்கு பிடிச்சது நெல்சன் படம் தானாம்!

விஜய் நடித்த 'பீஸ்ட்' மற்றும் யாஷ் நடித்த 'கேஜிஎப் 2' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆன நிலையில் இந்த இரண்டு திரைப்படங்கள் குறித்து பல்வேறு விமர்சகர்கள் தங்களது

நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி அபாரம்: 'பீஸ்ட்' 5 நாள் வசூல் நிலவரம்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியான நிலையில் இந்தப் படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன் நெகட்டிவ் விமர்சனங்கள் ஏராளமாக குவிந்தன.

முதல் பாகத்தில் விட்டதை இரண்டாம் பாகத்தில் பிடிப்பாரா? 'பீஸ்ட் 2' குறித்து நெல்சன்

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் பிடித்து இருந்தாலும் நடுநிலை ரசிகர்களுக்கு திருப்தி தரவில்லை.

புதிய கார் வாங்கிய குக் வித் கோமாளி நடிகை: இதற்கு முன் கார் வாங்கிய விஜய்டிவி பிரபலங்கள்!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் நடிகர் நடிகையர்கள் புதிய கார் வாங்கி வரும் நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை

சூப்பர்ஹிட் பாடலுக்கு செம நடனமாடிய ப்ரியா அட்லி: வைரல் வீடியோ

சூப்பர் ஹிட்டான பெங்காலி பாடலுக்கு ப்ரியா அட்லியும் அவரது தோழிகளும் நடனமாடி வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.