குக் வித் கோமாளி அடுத்த சீசன்.. தாமுவுடன் கைகோர்க்கும் நடுவர் இவரா?

  • IndiaGlitz, [Monday,March 11 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ’குக் வித் கோமாளி’ என்பதும் இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்தது.

ஆனால் யார் கண் பட்டதோ இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் திடீரென விலகிய நிலையில் அடுத்த சீசன் வருமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் விஜய் டிவி வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது வெங்கடேசன் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டாலும் தாமு தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் இருப்பார் என்றும் அவருடன் நடிகர் சுரேஷ் நடுவராக பங்கேற்பார் என்று கூறி வருகின்றனர்.

மேலும் ஜெகன் என்பவர் இந்த நிகழ்ச்சியை தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அடுத்த சீசன் குறித்த அறிவிப்பு கொஞ்சம் தாமதமாக வெளி வந்தாலும் கண்டிப்பாக வரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கிச்சன் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை நடிகர் சுரேஷ் நடத்திய நிலையில் தற்போது தாமுவும் அவரும் சேர்ந்து அடுத்த சீசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கு சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் கண்டிப்பாக விஜய் டிவி அடுத்த சீசனை ஹிட்டாக்கும் வகையில் தான் நடுவர்கள், தயாரிப்பாளர், மற்றும் குக் கோமாளிகளை தேர்வு செய்யும் என்றும் பழைய சீசனுக்கு இணையாக புதிய சீசன் கண்டிப்பாக இருக்கும் என்றும் விஜய் டிவி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More News

கமல் படத்தை இயக்க மறுத்த இயக்குனரின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம்?

கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்கள் கேட்டுக்கொண்டும் தமிழ் படத்தை இயக்க மறுத்த பிரபல மலையாள பெண் இயக்குனர் ஒருவர், தற்போது தமிழுக்கு வர இருப்பதாகவும், அவர் இயக்க இருக்கும் படத்தில் துருவ் விக்ரம்

ஒரே புகைப்படத்தில் 2 லேடி சூப்பர் ஸ்டார்.. லட்சக்கணக்கில் குவியும் லைக்ஸ்..!

 ஒரே புகைப்படத்தில் இரண்டு லேடி சூப்பர் ஸ்டார் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது  

7 ஆஸ்கர் விருதுகளை வென்ற 'ஓப்பன்ஹெய்மர்'.. விருது பெற்றவர்களின் முழு விவரங்கள்..!

96 வது ஆஸ்கர் விருது இன்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான 'ஓப்பன்ஹெய்மர்' என்ற திரைப்படம் 7 விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

கூத்தாடிகளை கொண்டாட வேண்டாம்.. விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கலாம்: அரசியல் கட்சி தலைவர்..!

கூத்தாடிகளை கொண்டாட வேண்டாம் என்று கூறிய அரசியல் கட்சி தலைவர், இதை சொல்வதால் விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கலாம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.100 கோடி.. ரூ.150 கோடி.. அடுத்தடுத்து 2 மலையாள படங்களின் சாதனை வசூல்.. ஏக்கத்தில் தமிழ் சினிமா..!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு சூப்பர் ஹிட் என்று சொல்லும் அளவுக்கு எந்த திரைப்படமும் வெளியாகாத நிலையில்  மலையாள திரை உலகில் அடுத்தடுத்து இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள் 100 கோடி மற்றும் 150