close
Choose your channels

ஒரே ஒரு நிகழ்ச்சியால் புகழின் உச்சிக்கு சென்ற புகழ்!

Friday, February 12, 2021 • தமிழ் Comments

’குக் வித் கோமாளி என்ற ஒரே ஒரு நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்று உள்ள புகழ் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது இந்த நிலைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மூன்று வேளை சாப்பிட உணவு கூட இல்லாமல் மெக்கானிக் ஷாப் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த புகழ், ‘ சிரிச்சா போச்சு’ உள்ளிட்ட விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளில் சின்ன சின்ன ரோல்களில் தலைகாட்டினார். தனது காமெடி மூலம் மக்களின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக பதிந்த அவர் தற்போது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் முதல் சீசனில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்

இதனை அடுத்து தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாவது சீசனில் புகழின் உச்சிக்கு அவர் சென்று விட்டார் என்றுதான் கூறவேண்டும். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 1 ஆரம்பிப்பதற்கு முன்னர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 600 ஃபாலோயர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் தற்போது அவருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவரது யூடியூப் சேனலும் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது அவர் ஒரு சில திரைப்படங்களிலும் காமெடி வேடத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அவர் திரைப்படத்தில் நடிக்க இருப்பதை முன்னணி ஊடகங்கள் கூட தலைப்பு செய்தியாக வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

திறமை இருந்தால் அந்த திறமையை வெளிப்படுத்த சரியான பிளாட்பாரம் கிடைத்தால் அதை சரியாக பயன்படுத்தி சாதாரண நிலையில் உள்ள ஒருவர் கூட புகழின் உச்சிக்கு வரமுடியும் என்று ஏற்கனவே பலர் நிரூபித்த நிலையில் புகழ் அந்த வகையில் தற்போது தனது திறமையை நிரூபித்து புகழ் பெற்றுள்ளார். விரைவில் அவர் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அந்த காலம் வெகு தூரம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz