'எனக்கு மூணு மாசம் வீட்ல தங்க வச்சு சாப்பாடு போட்டது இவர் தான்.. 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் புகழ் நெகிழ்ச்சி..!

  • IndiaGlitz, [Saturday,April 29 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இன்று இரண்டு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் அறிமுகம் ஆகியிருக்கும் நிலையில் அவர்களில் ஒருவரை கட்டி பிடித்துக் கொண்ட புகழ், நான் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டபோது இவர்தான் தன்னுடைய வீட்டில் என்னை மூன்று மாதங்கள் தங்க வைத்து சாப்பாடு போட்டு, உடையும் கொடுத்தார் என நெகிழ்ச்சியாக கூறியது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 4 நிகழ்ச்சி, 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் 5 போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆன நிலையில் தற்போது ஐந்து போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் மற்றும் கலை இயக்குனர் கிரண் ஆகிய இருவரும் இந்த வாரம் வைல் கார்டு போட்டியாளராக என்ட்ரி ஆகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் கஜேஷ் என்ட்ரியான போது புகழ் ஆச்சரியமடைந்தார். இந்த நிகழ்ச்சிகளில் நீ கலந்து கொள்கிறாய் என என்னிடம் கூட சொல்லவே இல்லையே என செல்லமாக கோபித்துக் கொண்ட புகழ், அதன் பிறகு தான் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டபோது கஜேஷ் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்று மூன்று மாதம் தங்க வைத்து சோறு போட்டார் என்றும் அவர் செய்த உதவியை என்னால் மறக்க முடியாது என்றும் நெகிழ்வுடன் கூறினார்.

நான் இந்த அளவுக்கு இன்று நல்ல நிலைமையில் உள்ளேன் என்றால் அதற்கு கஜேஷ் தான் காரணம் என்றும் இந்த தகவலை நான் இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்வது மிக சரியாக இருக்கும் என்பதால் அதை கூறுகிறேன் என்றும் தெரிவித்தார்.

நடிகர் ஆனந்த் பாபு மகனான கஜேஷ் பல வருடங்களுக்கு முன் செய்த இந்த உதவி தற்போது தான் வெளியே தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.

More News

உலக பைக் டூரின்போது திரையுலக பிரபலத்தையும் அழைத்து சென்ற அஜித்.. இதுதான் காரணமா?

அஜித் தற்போது உலக பைக் டூரில் இருக்கிறார் என்பதும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேபாளில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது என்பதையும் பார்த்தோம். 

ஒருவழியாக வருகிறது 'ஏகே 62' அப்டேட்.. அஜித் ரசிகர்கள் குஷி..!

அஜித் நடிக்க இருக்கும் 'ஏகே 62' என்ற படத்தின் அப்டேட் அவருடைய பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன. 

அப்ப நான் 9வது தான் படிச்சுக்கிட்டு இருந்தேன்.. அஜித்துடன் முதல் பட அனுபவம் குறித்து பேசிய நடிகை..!

அஜித் நடித்த முதல் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சங்கவி என்பதும் அதன் பிறகு அவர் பல விஜய் படங்களில் நடித்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் 'அமராவதி' திரைப்படம் அஜித்தின்

கவர்ச்சி நடிகை போல் மாற ஆசைப்பட்டு அறுவை சிகிச்சை செய்த மாடல் அழகி மரணம்..!

பிரபல ஹாலிவுட் கவர்ச்சி நடிகை போல் மாற ஆசைப்பட்டு அறுவை சிகிச்சை செய்த இளம் மாடல் அழகி திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வனிதாவை திருமணம் செய்ததாக கூறப்படும் பீட்டர் பால் திடீர் மரணம்.. என்ன ஆச்சு.?

கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் செய்ததாக கூறப்படும் பீட்டர் பால் திடீரென உடல் நல குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.