close
Choose your channels

தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட 'குக் வித் கோமாளி' புகழ்.. என்ன காரணம்?

Sunday, June 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் புகழ், தளபதி விஜய் ரசிகர்களிடம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் கடந்த மூன்று சீசன்கள் போலவே இந்த சீசன் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் கோமாளிகள் 1970 லிருந்து 2020 வரையிலான திரைப்படங்களில் உள்ள கேரக்டர்களில் வந்துள்ளனர். அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு கேரக்டரில் புகழ் கெட்டப் உள்ளது. அதாவது அவர் 2009 ஆம் ஆண்டு வெளியான விஜய் நடித்த கில்லி திரைப்படத்தின் கேரக்டரில் வந்திருந்தார்.

அவர் கில்லி விஜய் போலவே நடித்துக் காட்டிய நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’அனைத்து தளபதி ரசிகர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன், தவறாக யாரும் நினைக்க வேண்டாம், அனைத்தும் கற்பனையே’ என்று பதிவு செய்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் பலர் அவருக்கு பதில் அளித்துள்ளனர். இதில் விஜய் கெட்டப் உங்களுக்கு நன்றாக இருந்தது, ரசிக்க வைக்கிற அளவுக்கு இருந்தது என்று கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos