'குக் வித் கோமாளி' ரவீனாவின் காதலர் ஒரு டான்ஸ் மாஸ்டரா? க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,June 03 2023]

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தொலைக்காட்சி சீரியல் நடிகை ரவீனா, டான்ஸ் மாஸ்டர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் இருவரும் காதலர்களா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்

விஜய் நடித்த ’ஜில்லா’ கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ விஷ்ணு விஷால் நடித்த ;ராட்சசன்; உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ரவீனா. அதன் பிறகு அவர் ’பூவே பூச்சூடவா’ ‘மௌன ராகம் 2’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார் என்பதும் இந்த தொடர்களில் அவரது கேரக்டருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’குக் வித் கோமாளி சீசன் 4’ நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரவீனா, டான்ஸ் மாஸ்டர் மணியுடன் இணைந்திருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இருவரும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஈடுபட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் கூட வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் மணி, ரவீனா இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிய நிலையில் ரவீனா மற்றும் டான்ஸ் மாஸ்டர் மணி ஆகிய இருவரும் தங்கள் காதல் பற்றி இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டைட்டானிக் புகழ் நடிகருடன் டேட்டிங் செய்யும் இந்திய மாடல்… படு சுவாரசியமான தகவல்

உலகப் புகழ்பெற்ற ‘டைட்டானிக்’ திரைப்படத்தில் நடித்து ஹாலிவுட் நட்சத்திரமாக வலம்வரும் லியோனார்டோ டிகாப்ரியோவுடன்

என் மகனின் முதல் முத்தம்… உருகி நிற்கும் வில்லன் நடிகரின் க்யூட்டான புகைப்படம் வைரல்!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்தில் வேம்புலியாக வில்லன் கேரக்டரில் மிரட்டிய நடிகர் தற்போது தனது மகனின் முதல் முத்தத்தை பெற்றுவிட்டதாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அஜித்துக்கு உறவினர் ஆகிறாரா யாஷிகா ஆனந்த்.. நெருக்கமான புகைப்படம் வைரல்..!

நடிகர் அஜித்தின் நெருக்கமான உறவினருடன் நடிகை யாஷிகா ஆனந்த் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து அஜித்துக்கு அவர் உறவினர் ஆகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அமெரிக்காவை விட ஒரு நாள் முன்னதாக இந்தியாவில் வெளியாகிறது 'இண்டியானா ஜோன்ஸ்'..!

இந்திய ரசிகர்களுக்கு ஒரு பெரிய செய்தி, அது என்னவெனில் அதிக அளவு எதிர்பார்க்கப்பட்ட அதிரடி சாகசமான 'இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி' இந்தியாவில் அமெரிக்காவை விட ஒரு நாள் முன்னதாக

இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்று.. ரயில் விபத்து குறித்து கமல்ஹாசன்..!

இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்று என ஒடிசா ரயில் விபத்து குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: