close
Choose your channels

புத்தம் புது கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்.. இம்முறை வாங்கியது கோமாளி..!

Thursday, February 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்து பிரபலமாகிவிட்டால் சொந்த கார், வீடு வாங்கி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடும் நட்சத்திரங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ’குக் வித் கோமாளி’ என்ற ஒரே ஒரு நிகழ்ச்சியில் மட்டுமே கலந்து கொண்ட ஒருவர் புத்தம் புது கார் வாங்கி உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ’குக் வித் கோமாளி என்பதும் இந்த ஷோவில் கலந்து கொள்ள பலர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஷோவில் கலந்து கொண்ட சிலர் சினிமாவில் ஹீரோவாகவும் காமெடி நட்சத்திரங்களாகவும் ஜொலித்து வருகின்றனர்.

தற்போது ’குக் வித் கோமாளி’ நான்காவது சீசன் தொடங்கியுள்ள நிலையில் இந்த சீசனில் விசித்ரா, ஷெரின், காளையன், கிஷோர், ஸ்ருஷ்டி டாங்கே, ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஆண்டிரியா, ஷிவாங்கி, மைம் கோபி ஆகியோர் குக்கூகளாக கலந்து கொண்டுள்ளனர். புகழ், குரேஷி, சுனிதா, மணிமேகலை, சுனிதா ஆகிய பழைய கோமாளிகளுடன் சில புதிய கோமாளிகளும் இந்நிகழ்ச்சியில் உள்ளனர்,.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளில் ஒருவர் சக்தி. இவர் இப்போது புத்தம் புது காரை வாங்கியுள்ளார். இந்த கார் குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. கடந்த சீசனில் அவ்வப்போது கலந்து கொண்ட சக்தி இந்த சீசனில் இனி வரும் எபிசோடுகளில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.