ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'குக் வித் கோமாளி சீசன் 3' அறிவிப்பு!


Send us your feedback to audioarticles@vaarta.com


ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘குக் வித் கோமாளி சீசன் 3’ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்
குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சி ஓரளவுக்கு பிரபலமான நிலையில் சீசன் 2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘குக்’கள் மற்றும் கோமாளிகள் தற்போது திரை உலகிலும் ஜொலித்து வருகின்றனர் என்பதும், குறிப்பாக அஸ்வின், பவித்ரா, தர்ஷா, புகழ், ஷிவாங்கி உள்பட பலர் திரையுலகில் பிஸியாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி சீசன் 3’ நிகழ்ச்சி விரைவில் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோ விஜய் டிவியின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதில் ஷிவாங்கி, பாலா, சுனிதா மற்றும் மணிமேகலை ஆகிய நான்கு கோமாளிகளுடன் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகிய இரண்டும் செஃப்கள் இருக்கும் காட்சிகள் உள்ளன.
இதனை அடுத்து குக் வித் கோமாளி 3வது சீசனில் மேற்கண்ட 4 கோமாளிகள் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மற்ற கோமாளிகள் யார்? குக்’கள் யார்? போன்ற விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் ‘குக் வித் கோமாளி சீசன் 3’ ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

