'குக் வித் கோமாளி' சீசன் 4 தொடங்கும் தேதி.., கோமாளிகள் யார் யார்?

  • IndiaGlitz, [Monday,January 23 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் நம்பர் 1 'குக் வித் கோமாளி’ என்பதும் இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது என்பது தெரிந்தது.

பொதுவாக எந்த ஒரு ரியாலிட்டி ஷோக்களையும் ஒருமுறைக்கு மேல் பார்த்தால் போரடிக்கும். ஆனால் 'குக் வித் கோமாளி’ கடந்த சீசன்களை இப்பொழுது கூட தினந்தோறும் பலர் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் 'குக் வித் கோமாளி’ நான்காவது சீசன் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் டீசர் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ஜனவரி 28ஆம் தேதி முதல் 'குக் வித் கோமாளி’ 4வது சீசன் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது என்று குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீசனின் கோமாளிகளாக மணிமேகலை, ஜி.பி முத்து, சிங்கப்பூர் தீபன், சுனிதா, மோனிஷா, ரவீனா மற்றும் ஓட்டேரி சிவா ஆகியோர் உள்ளனர். ஏற்கனவே உள்ள கோமாளிகளான புகழ், பாலா ,குரேஷி, ஷிவாங்கி, உள்ளிட்டவர்கள் இந்த சீசனிலும் இருப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

ஒரு பொண்ணுக்காக இல்லைன்னா இந்த உலகத்தில எதுக்கு வாழணும்.. விஜய்சேதுபதியின் 'மைக்கேல்' டிரைலர்

விஜய் சேதுபதி, கௌதம் மேனன், சந்தீப் கிஷான் நடிப்பில் உருவான 'மைக்கேல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

விக்ரமனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போட்டியாளர்.. வைரல் வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நேற்றைய கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார் என்பதையும் அவருக்கு பிக் பாஸ் கோப்பை மற்றும் 50

'தளபதி 67' படத்தில் பகத் பாசில் இருக்கின்றாரா? அவரே கூறிய பதில் இதோ!

 விஜய் நடித்து வரும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் இணையும் நட்சத்திரங்களின் தகவல்கள் இதுவரை இல்லாத அளவில்

வெற்றி வாய்ப்பு இருந்தும் அரசியலால் தோற்றுப்போனாரா விக்ரமன்? நெட்டிசன்களின் கருத்து என்ன?

 பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே அந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பதை கிட்டத்தட்ட பார்வையாளர்கள் கணித்து விடுவார்கள். நான்காம் சீசனில் ஆரி, ஐந்தாம் சீசனில் ராஜு என

'தமிழ்நாடு' குறித்து ஆணித்தரமாக கூறிய கமல்ஹாசன்... அடுத்த பிக்பாஸ் சீசனுக்கு வருவாரா?

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, தமிழகம் என்ற பிரச்சனை ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும் நிலையில் 'தமிழ்நாடு' என்பதை ஆணித்தரமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலேவில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.