'குக் வித் கோமாளி' சீசன் 6.. போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ:


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘குக் வித் கோமாளி’. பிக்பாஸ்-க்கு அடுத்தபடியாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் நிகழ்ச்சி இது. நாளை இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தொடங்கவுள்ளது.
ஒவ்வொரு சனி, ஞாயிறு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக செஃப்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ், மற்றும் கௌஷிக் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் என கசிந்த தகவலின்படி இதோ பட்டியல்:
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்
நடிகை பிரியா ராமன்
உமர் லத்தீப் (அமரன் புகழ்)
சீரியல் நடிகை ஷபானா
நடிகை மதுமிதா
நடிகர் கஞ்சா கருப்பு
யூட்யூப் பிரபலமான சௌந்தர்யா
பிக்பாஸ் வின்னர் ராஜு
விவசாயி நந்தகுமார்
மேலும் கோமாளிகளில் புகழ், சரத், சுனிதா, ராமர் ஆகியோர்களுடன் இந்த சீசனில் பிக்பாஸ் சௌந்தர்யா, பூவையார் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். இந்த சீசனின் குக்குகள், கோமாளிகள் ஆச்சரியமான தேர்வாக இருப்பதால், இந்த சீசனும் முழு கலாட்டாவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
Cooku with Comali is Back 🔥 Cooku with Comali Season 6 | Grand Launch 😃 மே 4 இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #GenGoldVsGenBold #CookuWithComaliSeason6 #CookuWithComali6 #CWC #LaunchPromo #VijayTelevision #VijayTV pic.twitter.com/c1jfsvl0aS
— Vijay Television (@vijaytelevision) May 2, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments