குக் வித் கோமாளி' சீசன் 6ல் இவர்கள் எல்லாம் குக்குகளா? அதிலும் இந்த நடிகை எப்படி சம்மதித்தார்?


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி சீசன் 6' வரும் ஞாயிறு அன்று தொடங்க இருக்கிறது. இந்த சீசனில் ராமர், புகழ், சரத் மற்றும் சுனிதா ஆகிய நால்வரும் மீண்டும் கோமாளிகளாக கலந்து கொள்கிறார்கள் என்பதையும், இது ஏற்கனவே வெளிவந்த தகவலாகும்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சௌந்தர்யா, ஒரு 'குக்' ஆக கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. மேலும் சில புதிய குக்குகள் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை வடிவுக்கரசி, தீபக், லட்சுமி ராமகிருஷ்ணன், பிரியா ராமன், ஷபானா ஆகியோரும் இந்த சீசனில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தான் ஆச்சரியம்! சீரியஸான நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டு வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், இப்போது இந்த காமெடி நிகழ்ச்சியில் எப்படி கலந்துகொள்கிறார் என்பது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில்: "பல சீரியஸான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டேன். ஒரு காமெடி நிகழ்ச்சியையும் செய்து பார்க்கலாமே என்ற எண்ணத்தில்தான் வந்தேன். அதே நேரத்தில் ஒரு சீரியஸான நிகழ்ச்சியையும் விரைவில் தொடங்க உள்ளேன்," என்றார்.
பத்தாண்டுகளுக்கு முன் விஜய் டிவியுடன் இருந்த சில பிரச்சினைகள் காரணமாக லட்சுமி ராமகிருஷ்ணன் விஜய் டிவியின் எந்த ஷோக்களிலும் பங்கேற்கவில்லை. தற்போது விஜய் டிவி அதற்காக வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் மீண்டும் ‘கு
வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில், ‘குக் வித் கோமாளி’ சீசன் 6 மற்ற சீசன்களை போலவே கலகலப்பாக அமையும் என்பது, பங்கேற்கும் குக்குகள் மற்றும் கோமாளிகளின் பட்டியலிலிருந்து உறுதி செய்யப்படுகிறது.
யார் அந்த CONTESTANTS..? 😲 | Cooku with Comali Season 6 😃 மே 4 இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Gen Gold Vs Gen Bold | Vijay Television | Vijay TV pic.twitter.com/tNAHO4CwER
— Vijay Television (@vijaytelevision) April 30, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments