ஷிவாங்கியின் புதிய சாதனை: ரசிகர்கள் மகிழ்ச்சி!

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது வேற லெவலில் பிரபலம் ஆகி விட்டார்கள் என்பது தெரிந்ததே. குறிப்பாக புகழ், ஷிவாங்கி மற்றும் அஸ்வின் ஆகியோர்களுக்கு கூடுதலாக பிரபலம் கிடைத்துள்ளது என்பதும் அது மட்டுமின்றி அவர்களுக்கு திரையுலகில் வாய்ப்புகளும் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது சத்தமில்லாமல் ஷிவாங்கி சமூகவலைதளத்தில் ஒரு சாதனையை செய்து உள்ளார். ஷிவாங்கியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது 3 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர். இதனை ஷிவாங்கி மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் குறிப்பிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்

ஷிவாங்கி தவிர ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாருக்கும் 3 மில்லியன் ஃபாலோயர்கள் இல்லை என்பதால் இது ஷிவாங்கியின் சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதனை அடுத்து ஷிவாங்கி ரசிகர்கள் அவருக்கு 3 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்ததை கொண்டாடி வருகின்றனர்.

ஷிவாங்கி தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டான்’ என்ற படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் ஒரு சில படங்களில் நடிப்பதற்கு அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

ஸ்டெர்லைட் திறப்புக்கு அனுமதி… தமிழகத்திற்கு முன்னுரிமை இல்லை- உச்சநீதிமன்றம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதி அளிக்கிறோம்.

ஹாலிவுட்டையே ஆட்டிப்படைத்த சில்வஸ்டர் ஸ்டோலன்… வெற்றி பயணத்தின் ஆடியோ வடிவம்!

“ராக்கி“ என்ற ஹாலிவுட் சினிமாவை விரும்பாத ரசிகர்களே இருக்க முடியாது. ஆனால் இந்த சினிமாவிற்கு பின்னால் ஒரு கதையாசிரியர்,

பொது முடக்கம் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய அரசு...!

இந்தியாவில் பொது முடக்கத்தை அமல்படுத்தினால், என்னென்ன நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கோவை சரளா திருமணம் செய்யாததற்கு இப்படி ஒரு காரணமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகின் காமெடி நடிகைகளில் ஒருவர் கோவை சரளா என்பதும் கடந்த பல ஆண்டுகளாக இவர் தமிழ் தெலுங்கு மொழிகளில் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

செடிகளை வைத்து கண்ணாடி கூண்டு முகக்கவசம்… எதற்கு இந்த முயற்சி?

பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர் உண்மையான தாவரச் செடிகளை வைத்து கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட முகக்கவசத்தை அணிந்து கொண்டு பொது மக்கள் மத்தியில் நடமாடி வருகிறார்.