'குக் வித் கோமாளி' ஸ்ருதிகா கணவரை பார்த்து இருக்கின்றீர்களா? இதோ புகைப்படங்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று ’குக் வித் கோமாளி’, தற்போது 3வது சீசன் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த சீசனில் உள்ள போட்டியாளர்கள் ஜாலியாக அரட்டை அடிப்பதையும் பார்க்கும்போது குக்குகள் யார்? கோமாளிகள் யார்? என்று வித்தியாசம் தெரியாத அளவுக்கு அனைவருமே காமெடி செய்து வருகின்றனர். இதுதான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு மணி நேரம் நிகழ்ச்சி ஒன்று முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும் என்றால் அது இந்த நிகழ்ச்சியை தவிர வேறு எதுவும் இல்லை என்பதுதான் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான ஸ்ருதிகா எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பது பாசிட்டிவாக உள்ளது. அவருடன் வரும் கோமாளியுடன் அவர் அரட்டை அடிப்பது காமெடியின் உச்சமாக இருக்கும். மேலும் சமூக வலைதளத்திலும் தற்போது அவர் பிரபலமாகி உள்ளார்.

இந்த நிலையில் சற்று முன் அவர் திருவண்ணாமலை கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தனது விருப்பத்திற்குரிய இடம் திருவண்ணாமலை என்றும், அங்கு சென்றால் மனம் நிம்மதி அடையும் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ருதிகாவை பார்த்து திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த பொதுமக்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

More News

'சந்தானம்' கேரக்டரில் விஜய்சேதுபதி: மாஸ் போஸ்டர் ரிலீஸ்

சந்தானம் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து இருப்பதாக வெளியாகி இருக்கும் மாஸ் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'விக்ரம்' படத்துடன் ரிலீஸாக இருந்த பிரபல நடிகர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

ஆர்யன்கான் வழக்கை விசாரணை செய்த அதிகாரி சென்னைக்கு மாற்றம்!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி சென்னைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இளையராஜாவுக்கு ஆயுள் விருத்தி ஹோமபூஜை: எங்கே நடந்தது தெரியுமா?

இசைஞானி இளையராஜாவுக்கு கோவில் ஒன்றில் ஆயுள் விருத்தி ஹோம பூஜை நடைபெற்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'மாநாடு' படத்தின் மொத்த வசூல் எவ்வளவு? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தகவல்

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அதன் பின் சில வாரங்களுக்கு முன்னர் இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி