close
Choose your channels

'பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மேலும் ஒரு 'குக் வித் கோமாளி'?

Wednesday, March 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த நான்கு மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இதனை அடுத்து ஐந்தாவது சீசனுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே

வரும் ஜூன் மாதம் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் விஜய் டிவி நிர்வாகம் தற்போது தீவிரமாக உள்ளது

ஏற்கனவே ஒரு சில போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது. குறிப்பாக ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனி, பவித்ரா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் மேலும் நடிகர்கள் மன்சூர்அலிகான், ராதாரவி, பாடகர் அந்தோணிதாசன் உள்ளிட்ட ஒரு சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் கோமாளிகளில் ஒருவரான சுனிதாவிடம் விஜய் டிவி நிர்வாகம் பேசி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்ட ரேகா, அறந்தாங்கி நிஷா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அதேபோல் ’குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்துகொண்ட கனி, பவித்ரா மற்றும் சுனிதா கலந்து கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.