சந்தானத்திற்காக துணை முதல்வர் காலில் விழுந்த கூல் சுரேஷ்.. உணர்ச்சிவச பேச்சு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் சந்தானம் நடித்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் இடம்பெற்ற 'கோவிந்தா' என்ற பாடலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு பாஜக நிர்வாகி, சந்தானத்திற்கு 100 கோடி ரூபாய் கேட்டு வழக்கு தொடர்வதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்ட நடிகர் கூல் சுரேஷ், “சந்தானம் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளார். இந்த படத்திற்கு பிரச்சனை செய்ய வேண்டாம்,” என தெரிவித்தார்.
மேலும் அவர், “தெலுங்கானா துணை முதல்வர் பவன் கல்யாண் அவர்களின் காலில் விழுகிறேன்” என்று மேடையிலேயே தாழ்மையுடன் காலில் விழுந்தார். “இங்கே நீங்கள் இருப்பதாக நினைத்து காலில் விழுகிறேன். உங்கள் காலில் விழுவதால் எந்த தவறும் இல்லை, ஏனெனில் நீங்கள் ஒரு ஆன்மீகவாதி. எல்லா கோவிலுக்கும் சென்றிருக்கிறீர்கள். ஒரு சாமியாரின் காலில் விழுந்ததாக நான் நினைத்துக் கொள்கிறேன்,” என்றார்.
நீங்களும் ஒரு நடிகராக உள்ளீர்கள், ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்வது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது உங்களுக்கு தெரியும். இந்த படத்தை பார்த்துவிட்டு அதன்பின் உங்கள் கருத்தை தெரிவிக்கவும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அவருடைய இந்த உணர்ச்சி வசமான பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருமாள் உங்களுக்கு சொந்தமில்லை.. நண்பனுக்காக காலில் விழுந்த #coolsuresh #coolsureshlatestspeech
— AMN cinema (@ponchicherry) May 14, 2025
DD Next Level Govindha Song Issue Cool Suresh Speech at Anal Mazai Audio Launch | Santhanam#coolsureshlatestspeech #analmazhaiaudiolaunch #santhanam #govindhasongissue pic.twitter.com/aXzYPPTRGn
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com