close
Choose your channels

கொரனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த இசைக்கலைஞர்கள்

Monday, March 23, 2020 • தமிழ் Comments

உலகம் முழுவதும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்த விழிப்புணர்வை திரையுலகை சேர்ந்த பலர் ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இசைக்கலைஞர்கள் ஒரு பாடல் மூலம் மீண்டும் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

"நாளை நமக்கொரு காலம் வரும்" என்ற இந்த கொரோனா விழிப்புணர்வு பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு இசையமைத்த் சதீஷ் ஏற்கனவே தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு "வானே இடிந்ததம்மா" என்ற இரங்கல் பாடலை கம்போஸ் செய்து பெரும் புகழ் பெற்றவர் என்பதும் இந்த பாடலை எழுதிய அஸ்வின் தான் இந்த கொரோனா பாடலையும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த பாடல் மூலம் மீண்டும் சதீஸ் வர்சன் மற்றும் அஸ்மின் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இசையமைப்பாளர் சதீஸ் வர்சன் ஏற்கனவே எஸ்பி ஜனநாதன் இயக்கிய "புறம்போக்கு" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொரோனா விழிப்புணர்வு பாடலை எழுதிய அஸ்மின் ஏற்கனவே விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’ என்ற படத்தில் இடம்பெற்ற "தப்பெல்லாம் தப்பேயில்லை" மற்றும் அஜித்தின் "விஸ்வாசம்" திரைப்படத்தில் இடம்பெற்ற 'தூக்குதொர பேரக்கேட்டா வாயப்பொத்தும் நெருப்பு" ஆகிய பாடலையும் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz