close
Choose your channels

குறிப்பிட்ட மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு....!

Friday, July 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில், குறிப்பிட்ட 7 மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், நீலகிரி, சிவகங்கை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஒருசில மாவட்டங்களில் பாதிப்பு ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் உள்ளது.

திருவண்ணாமலை பாதிப்பு :
29-ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 125 பேர்
30-ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 299 பேர்
1-ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 185 பேர்

விழுப்புரத்தில் பாதிப்பு :
29-ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 52 பேர்
30-ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 65 பேர்
1-ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை -70 பேர்

நீலகிரியில் பாதிப்பு:
29-ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 75 பேர்
30-ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 87 பேர்
1-ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை -90 பேர்

இதேபோல் திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாகவும், பெரம்பலூர் மாவட்டத்தில் 3 தினங்களாகவும் பாதிப்பு அதிகரித்து வருகின்றது.

பெரம்பலூரில் பாதிப்பு:
28 -ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 18பேர்
1-ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 29 பேர்


கள்ளக்குறிச்சியில் பாதிப்பு:
கடந்த ஒரு வாரமாகவே இங்கு பாதிப்பு அதிகரித்தும், குறைந்தும் வருகிறது.

25 -ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 110 பேர்
26 -ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 140 பேர்
29 - ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை -99 பேர்
1 -ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 128 பேர்

இந்த வகையில் மதுரையில் குறைந்து வந்த பாதிப்பு நேற்றைய முன்தினம் 68 நபர்களுக்கும், நேற்று 94 நபர்களுக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.