close
Choose your channels

கொரோனா உணவு வகைகள்!!!

Thursday, April 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா உணவு வகைகள்!!!

 

உலக வரைபடம் முழுவதும் ஆக்கிரமித்து கொடூரமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவை தற்போது சிலர் தட்டில் வைத்து அழகுபார்த்து வருகின்றனர். முதலில் குழந்தைகளை கவருகிறோம் என்ற பெயரில் கொரோனா கேக்குகளை உருவாக்க ஆரம்பித்த நமது மாஸ்டர் செப்கள் தற்போது போட்டி போட்டுக்குகொண்டு பல டிஸ்களை செய்து அசத்துகின்றனர். நமது உள்ளூரிலும் தற்போது, “நீ எவ்வளவு பெரிய வைரஸாக இருந்தாலும் பரவாயில்லை, வறுத்து தின்றுவிடுவோம்” என்ற சாவல் விட்டு தோசை வார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படி உலகம் முழுவதும் ஒரு கலக்கு கலக்கிய கொரோனா உணவு வகைகளின் தொகுப்பு.

1.கொரோனா ''sandesh"

மேற்கு கொல்கொத்தாவில் அமைந்துள்ள இந்துஸ்தான் உணவகம் தற்போது விதவிதமான கொரோனா இனிப்புகளை உருவாக்கியிருக்கிறது. மாநில அரசின் அனுமதிப்படி ஒருநாளைக்கு 4 மணிநேரம் அவர்கள் தங்களது கடையைத் திறந்து வைத்திருக்கிறார்கள். கிடைக்கிற குறைவான நேரத்தில் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த கடையில் அதிகமாக விற்பனையாகி வரும் பெங்கால் இனிப்பான ''sandesh" தற்போத மாற்றியமைத்திருக்கிறார். இந்த வடிவமாற்றம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

2. கொரோனா பக்கோடா

எதுக்கிடைத்தாலும் வறுத்து ஒரு கைப்பார்த்து விடுவது நம்மூர் பழக்கம். அப்படியென்றால் இந்த கொரோனா பக்கோடாவும் கண்டிப்பாக நம்மூர் உணவாகத்தான் இருக்கும். சமூக வலைத்தளங்களில் கடந்த வாரங்களில் அதிகம் பகிரப்பட்ட பதிவுகளில் ஒன்று இந்த கொரோனா பக்கோடா.

3. கொரோனா பர்கர்

வியட்நாமின் ஹனோய் நகரில் பிஸ்ஸா ஹோமில் ஒரு சமையல்காரர் கொரோனா பர்கரை உருவாக்கியிருக்கிறார். இந்த பர்கர் கொரோனா வைரஸ் புரதங்களைப்போன்றே முள் கிரீடங்களுடன் பச்சே – தேயிலை படிந்த பந்துமுனைகளால் ஆக்கப்பட்டு இருக்கிறது. இந்த பர்கரை சாப்பிடுங்கள் உங்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய பயம் போய்விடும் என்று நகைச்சுவையாக இந்த சமையல்காரர் விற்றுவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4. கொரோனா கேக்

பிரான்சில் செஃப் ஒருவர் ஈஸ்டரைக் கொண்டாடுவதற்காக கொரோனா கேக்கை செய்திருந்தார். அந்த கேக் முட்டை வடிவத்தில் கருப்பு வண்ணம் பூசப்பட்ட சாக்லேட்டுடன் கொரோனா முள்கிரீடத்துடன் உருவாக்கப்பட்டிருந்தது. கொண்டாட்ட மனநிலையில் மக்கள் கொரானா வைரஸ் பரவலை மறந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் உருவாக்கியதாக செஃப் ஜேன் பிரான்கோசிஸ் தெரிவித்து இருக்கிறார்.

5. கொரோனா ஐஸ் கிரீம்

இத்தாலியில் கொரோனா பாதிப்பினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தாலும் மக்கள் ஒருபக்கம் கொண்டாட்ட மனநிலையில் ஊர்ச்சுற்றி வருகின்றனர். அப்படி Cremona வின் புறநகர்ப்பகுதியில் உள்ள Gelateria Infinito கடையில் தற்போது கொரோனா வடிவிலான கேக் மற்றும் ஐஸ் கிரீம் விற்கப்பட்டு வருகிறது. கடையின் உரிமையாளர் ஆண்ட்ரியா ஷிராலி இதுகுறித்து இது விளையாட்டான நேரம் அல்ல என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் சோகமான தருணத்திற்காக மக்கள் இங்கு வருவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

6. கொரோனா பாதுகாப்பு கேக்

பாலஸ்தீனத்தின் தென் காசா பகுதியில் உள்ள கேக் கடை உரிமையாளர் மக்களுக்கு கொரோனாவை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு கேக்கை வடிவமைத்தார். ஒரு பெண் அந்த கேக்கில் முகக்கவசம் அணிந்திருப்பது போல உருவாக்கி அதை சமூக வலைத்தளத்தில் உலவவிட்டார். தற்போது அந்த கேக்குக்கான தேவை அதிகரித்து ஒரு நாளைக்கு பல மடங்கு கேக்கை தயாரிப்பதாக கூறுகிறார் கடையின் உரிமையாளர் அல்-நடா.

7. கொரோனா சான்விச்

கொரோனா சைவமா? அசைவமா ? தெரியாது ஆனால் கொரோனா பெயரில் இறைச்சியால் செய்யப்பட்ட ஒரு சான்விச்சை இத்தாலியர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். கொரோனா என்றால் இத்தாலிய மொழியில் கிரீடம் என்று பொருள். அதனால் வட்ட வடிவமான கிரீடத்துடன் ஒத்த புள்ளிகளைக் கொண்டு சான்விட்சை உருவாக்கியிருக்கிறார்கள்.

8. டாய்லட் பேப்பர் கேக்

ஜெர்மனி- கொரோனா வைரஸ் பரவலின்போது கிருமிநாசினிப் பொருட்கள் மற்றும் டாய்லட் பேர்ப்பர்களுக்கான தேவை உலகம் முழுவதும் அதிகரித்து காணப்பட்டது. இந்த பற்றாக்குறையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்நோக்கில் Dortmund இல் உள்ள German Baker நிர்வாகத்தினர் டாய்லட் பேப்பர் வடிவத்தில் கேக்குகளை உருவாக்கினார்கள். இந்த கேக்குகள் விற்பனையில் பட்டையை கிளப்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

9. ஜெர்மனி கப் கேக்

ஜெர்மனியில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டங்கள் முழுவதுமாக தடை செய்யப்பட்டது. ஆனாலும் மக்கள் கொரோனா கப் கேக்குகளைச் சாப்பிட்டு மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டிருக்கின்றனர். இந்தக் கப் கேக்குகளை மிஸ்டர் மிட்டாய் என்ற கடையின் விற்பனையாளர் தற்போது “Corona Antibodu Pralines" என அழைக்கப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.