பிரேசிலை தொடர்ந்து இன்னொரு நாட்டின் அதிபருக்கும் கொரோனா தொற்று!!! அதிர்ச்சித் தகவல்!!!

  • IndiaGlitz, [Friday,July 10 2020]

 

ஒரு நாட்டின் அதிபருக்கே கொரோனா நோய்த்தொற்று ஏற்படும்போது அந்நாட்டின் அரசாங்கமே ஸ்தம்பித்து விடும் அபாயமும் இருக்கத்தான் செய்கிறது. சில மாதங்களுக்கு முன்பு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு அவர் பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமாகி மீண்டும் பணிக்குத் திரும்பினார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரேசில் பிரதமர் போல்சனோரோ விற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தென் அமெரிக்க நாடுகளுள் ஒன்றான பொலிவியா நாட்டு அதிபர் ஜினைன் அனேஸ்க்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அதிபரே டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். தொற்று உறுதி செய்யப்பட்டாலும் அவர் நலமுடன் இருப்பதாகவும் தனிமைப்படுத்திக் கொண்டு அலுவலகப் பணிகளை தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். பொலிவியா தற்போது கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நாடாக மாறியிருக்கிறது. இதுவரை 44,113 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 1,638 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த மே மாதம் பொலிவியாவின் அதிபர் தேர்தல் நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக வரும் செப்டம்பர் மாதத்திற்கு இத்தேர்தல் ஒத்தி வைக்கப் பட்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் நிலைமை என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் முதற்கொண்டு 7 அமைச்சர்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஸ்தம்பித்து போயிருப்பதால் நிலைமை மேலும் சிக்கலாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

More News

மேலும் ஒரு தமிழக அமைச்சருக்கு கொரோனா: மொத்தம் 3 அமைச்சர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு

தமிழகத்தில் ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் மின் துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே

பேருந்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட 19 வயது இளம்பெண்: கொரோனா சந்தேகத்தால் பறிபோன உயிர்!

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பரவி இருக்கும் என்ற சந்தேகத்தால் 19 வயது இளம்பெண் ஒருவர் பேருந்தில் இருந்து சக பயணங்களால் தூக்கி எறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

முதல்முறையாக பொதுமீடியாவில் தலைகாட்டிய குமரிமுத்து மகள்: வைரலாகும் வீடியோ

பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவை அனைவரும் அறிந்தது உண்டு. ஆனால் அவரது குடும்பம் குறித்து இதுவரை யாரும் அறிந்ததில்லை. இந்த நிலையில் முதல் முறையாக குமரிமுத்துவின்

அரசை மட்டும் குறைகூற வேண்டாம், நமக்கும் பொறுப்பு வேணும்: பிரபல தமிழ் நடிகை

பிரபல நடிகையும் சேவ் சக்தி என்ற அமைப்பு மூலம் சமூக சேவை செய்து வருபவருமான நடிகை வரலட்சுமி, கொரோனா விஷயத்தில் அரசை மட்டும் குறை கூற வேண்டாம்

கொரோனா பாதித்தவருக்கு அறிகுறியே இல்லைனாலும் பெரிய பிரச்சனைதான்!!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!!

இந்தியா போன்ற சில நாடுகளில் கொரோனா பாதிப்பு பெரும்பாலானவருக்கு அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை என்ற செய்தி மிகவும் வரவேற்கத்தக்கதாகப் பார்க்கப்பட்டது.