close
Choose your channels

காதலிக்கு கொரோனா: புது சிக்கலில் டொனால்ட் ட்ரம்ப் ஜுனியர்!!!

Saturday, July 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் வெள்ளை மாளிகையில் பணியாற்றும் 3 பேருக்கு ஏற்கனவே கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது அவருடைய மூத்த மகன் ட்ரம்ப் ஜுனியரின் காதலி கிம்பர்லி கில்ஃபோயிலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. 51 வயதான கிம்பர்லி ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபரின் உரையைக் கேட்பதற்கு தெற்கு ட்க்கோட்டா பகுதிக்குச் சென்றபோது அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்நிகழ்ச்சியில் ட்ரம்ப் ஜுனியர் கலந்து கொண்டார் என்பதால் தற்போது மேலும் பரபரப்பு தொற்றிக் கொண்டு இருக்கிறது. இதுகுறித்து தகவல் அளித்துள்ள வெள்ளை மாளிகை அதிகாரிகள் நிகழ்ச்சியில் ஜுனியர் கலந்து கொண்டார் என்றாலும் விமானத்தில் ஒன்றாக இருவரும் பயணிக்கவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளனர்.

தற்போது கிம்பர்லிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றாலும் எந்த அறிகுறியும் இல்லாமல் உடல் நலமாக இருக்கிறார் என்றும் அதிகாரிகள் தகவல் அளித்து உள்ளனர். இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் ஜுனியருக்கு கொரோனா இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என்றும் அவர் கலந்து கொள்வதாக இருந்த அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.