நகைச்சுவை பிரபலம் நடிகர் செந்திலுக்கு கொரோனா பாதிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,April 13 2021]

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நகைச்சுவை பிரபலமாக வலம் வந்தவர் நடிகர் செந்தில். அதுவும் கவுண்டமணியுடன் இவரது நகைச்சுவை கூட்டணியை விரும்பாத ரசிகர்களே இருக்க முடியாது எனும் அளவிற்கு கடந்த 80, 90 களில் இருவரும் கொடிகட்டி பறந்தனர். இந்நிலையில் நடிகர் செந்திலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் கடந்த சில தினங்களாக சென்னையை ஒட்டிய காட்டான்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

கொரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து நடிகர் செந்தில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும் அந்தப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானவுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது சீரான உடல்நிலையுடன் இருக்கும் நடிகர் செந்தில் இன்னும் 3 நாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்றும் தகவல்கள் கூறப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக அதிமுக நட்சத்திரப் பேச்சாளராக இருந்த இவர் தற்போதைய தேர்தலை ஒட்டி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக-பாஜக கூட்டணி சார்பாக தீவிரத் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். தற்போது வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் நடிகர் செந்திலுக்கு கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'குக் வித் கோமாளி' பவித்ராவின் வேற லெவல் குத்து டான்ஸ்: வீடியோ வைரல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டது என்பதும் நாளை இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது

அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்....! முதல்வர் ஆலோசனை...!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை… அமெரிக்காவில் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!

அமெரிக்காவில் மினியா போலீஸ் நகரத்திற்கு அருகே உள்ள புரூக்ளின் நகரில் டான்ட் ரைட் என்ற 20 வயதே ஆன இன்னொரு கறுப்பின இளைஞர் தற்போது சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார்.

கண்முடித்தனமாக நடந்து கொண்ட காவலர்...! சஸ்பெண்ட் செய்ய புகாரளித்த ஹோட்டல் ஓனர்.......!

கோவை, தனியார் உணவகத்தில் உள்நுழைந்து பணியாளர்கள் மற்றும் பெண்களை தாக்கிய காவல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்யுமாறு,

நெற்றிப்பொட்டில் அடிக்கும் படம்… கர்ணன் குறித்து பெண் எம்.பி தெரிவித்த அதிரடி கருத்து!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசான திரைப்படம் “கர்ணன்”.