உத்திரப்பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் கொரோனா!!! 

  • IndiaGlitz, [Tuesday,March 24 2020]


உத்திரப்பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த பெண்குழந்தைக்குக் கொரோனா எனப் பெயர்ச் சூட்டப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அன்றைய தினத்தில் உத்திரப்பிரதேசம், கோரக்பூர் அடுத்த சோஹ்ரா கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு அக்குழந்தையின் மாமா “கொரோனா“ எனப் பெயர் சூட்டியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலால் 387,742 பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. மேலும், 16,782 உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பெற்றோர்களின் ஒப்புதலோடு குழந்தையின் மாமா நிதேஷ் திரிபாதி “கொரோனா” எனப் பெயர் சூட்டியிருக்கிறார்.

அவர் கூறும்போது, “கொரோனா பிரச்சினையால் உலகம் ஒன்றிணைந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் ஆபத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. இது உலகில் பல மக்களைக் கொன்றது. ஆனால் இது நம்மில் பல நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொண்டு வந்துள்ளது. இந்தக் குழந்தை தீமைக்கு எதிராக போராடுவதற்கான மக்கள் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கும்“ எனவும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தனது கோரத் தாண்டவத்தைத் தொடங்கியிருக்கும் நேரத்தில் “கொரோனா“ எனப் பெயர் சூட்டப்பட்டது பற்றி பலரும் தற்போது கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
 

More News

வருமானவரி தாக்கல் செய்ய, வரும் ஜுன் 30 வரை காலஅவகாசம்!!! மத்திய அரசு அறிவிப்பு!!!

கொரோனா எதிரொலியால் வருமானவரி, ஜி.எஸ்.டி தாக்கல் உள்ளிட்டவைகளில் சில சலுகைகளை வழங்க மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா

தென்னிந்திய நடிகர் சங்க தனி அதிகாரியின் முக்கிய அறிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த சில மாதங்களாக தனி அதிகாரியின் பொறுப்பில் உள்ள நிலையில் சற்றுமுன் தனி அதிகாரி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

'பேட்ட' நடிகரின் திருமணத்தில் திடீர் மாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்தவர் மணிகண்டன் ஆச்சாரி.

இந்த நேரத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம்: பிக்பாஸ் நடிகையின் கொரோனா விழிப்புணர்ச்சி வீடியோ

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்த வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட திரையுலக பிரபலங்கள் அவ்வப்போது வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

144 தடை உத்தரவை மீறினால் ஓராண்டு சிறை: ராணுவத்தை வரவழைக்கவிருப்பதாக முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுச்சேரியில் நேற்றில் இருந்தே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.