11 மாநிலங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை விகிதங்கள்!!!

  • IndiaGlitz, [Tuesday,April 07 2020]

இந்தியாவில் மார்ச் 1 அன்று வெறுமனே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக இருந்தது. ஒரு மாதத்தில் தற்போது 4 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. இந்தப் பாதிப்பு எண்ணிக்கைக்கு அதிகரிப்புக்கு டெல்லி தப்ளிக் ஜமாத் மாநாடு காரணமாகச் சொல்லப்பட்டாலும் அதற்கு முன்பிருந்தே பல மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை இருக்கத்தான் செய்தது. அப்படி 11 மாநிலங்களில் காணப்பட்ட பாதிப்பு பட்டியல் தற்போது அதிகரிக்கும் விகதங்களிலும் தொடந்து முன்னிலை வகிக்கிறது.

இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, கேரளா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், ஆந்திரபிரதேசம், குஜராத், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் ஆகியவை தொடர்ந்து முன்னிலை இடத்தையே வகிக்கின்றன. டெல்லி நிகழ்வுக்கு முன்னரும் இம்மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. தற்போது அதிகரித்து வரும் எண்ணிக்கையிலும் இந்த மாநிலங்கள் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த 11 மாநிலங்களில் மட்டும் 86 விழுக்காடு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது எனத் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் முதல் ஆயிரம் பாதிப்பு எண்ணிக்கையைத் தொட்டபோது இந்த 11 மாநிலங்களில் 81.54% பாதிப்பு இருந்தது எனத் தற்போது கணிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தொடும்போது இந்த விகிதம் 85.21% ஆகவும், பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தொட்டபோது இந்த விகிதம் 84.33% ஆகவும், தற்போது 4 ஆயிரத்தைத் தாண்டியிருக்கும் நிலையிலும் இந்த விகிதம் அதிகரித்தே காணப்படுகிறது. பாதிப்பு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே இந்த 11 மாநிலங்கள் முன்னிலை வகித்து வரும் நிலையில் தற்போது ஹரியாணா, ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.

More News

மும்பை மாப்பிள்ளைக்கும் டெல்லி பெண்ணிற்கும் வீடியோ காணொலி மூலம் நடைபெற்ற திருமணம்!!!

மும்பையைச் சேர்ந்த கடற்படை அதிகாரியான ப்ரீத் சிங் என்பவருக்கும் டெல்லியைச் சேர்ந்த நீத் கவுர் என்பவருக்கும் ஏப்ரல் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது

கொரோனா எதிரொலியால் கடும் வீழ்ச்சியை சந்தித்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு!!!

கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது

சென்னை பீனிக்ஸ் மால் சென்ற 3300 பேர்களுக்கு சோதனை: எத்தனை பேருக்கு கொரோனா?

சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்த 6 பெண்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அந்த 6 பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

சீன அதிபருக்கும் கடிதம் எழுதலாமே: கமல்ஹாசனை கிண்டல் செய்த பிக்பாஸ் போட்டியாளர்

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கமலஹாசனின் இந்த கடிதத்தை கிண்டலடித்துள்ளார்

இரண்டே நாளில் தூய்மை பணியாளர்களுக்கு தோழியாகிய பிரபல விஜே

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தன்னலம் கருதாது பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள்