close
Choose your channels

கொரோனா உயிரிழப்பு: ஜேசிபி வாகனத்தைக் கொண்டு உடலை அகற்றிய அவலம்!!!

Saturday, June 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா உயிரிழப்பு: ஜேசிபி வாகனத்தைக் கொண்டு உடலை அகற்றிய அவலம்!!!

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை உலகச் சுகாதார நிறுவனம் நெறிப்படுத்தி வழங்கியிருக்கிறது. இந்திய சுகாதாரத் துறை WHO வின் வழிமுறைகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும். யாரையும் அவமதிக்காத வகையில் மிகவும் பாதுகாப்பாக உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இப்படியிருக்கும்போது பலரும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலில் இருந்து தமக்கும் தொற்று வந்துவிடுமோ என்ற அச்சத்தால் பல சமயங்களில் சில அபாயகரமான முடிவையும் எடுத்து விடுகின்றனர்.

சென்னையில் கொரோனா பாதித்து உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் அவமதிக்க விவகாரம் இந்தியாவில் பூதாகரமாகியதை அடுத்து ஓரளவிற்கு மக்கள் தெளிவு பெற்றனர். ஆனால் தற்போது இதேபோல ஒரு சம்பவம் ஆந்திராவில் நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் உள்ள பலாசா பகுதியில் ஒய்வுபெற்ற மாநகராட்சி ஊழியர் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்பணியில் ஈடுபட்டபோது அவருக்குக் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. தனக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்ற விவரம் தெரியாமலே அவர் இறந்தும் போயிருக்கிறார்.

வீட்டில் உயிரிழந்த தாத்தாவின் உடலை எடுத்துச் செல்லுமாறு அவரது பேத்தி மாநகராட்சி ஊழியருக்குத் தகவல் கொடுத்து இருக்கிறார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் உட்பட அனைவரும் பாதுகாப்பாக PPE உடையினை அணிந்து கொண்டு உடலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதில் உடலை எடுத்துச் செல்வதற்கு ஜேசிபி வாகனத்தை பயன்படுத்தி இருக்கின்றனர். இச்சம்பவம் குறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பலாசா பகுதியில் உள்ள மாநகராட்சி ஊழியர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து அம்மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டு இருக்கிறார். தற்போது இது மனிதத் தன்மையற்ற செயல் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது.

இச்சம்பவம் குறித்து பேசிய அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, “காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது மனிதாபிமானமற்ற செயல், இதுபோன்ற பாதிப்புகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த நெறிமுறைகள் ஏற்கனவே தெளிவுபடுத்தப் பட்டுள்ளன” என்று கூறியிருக்கிறார். மேலும், தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் இச்செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.