ஒரே குடும்பத்தில் 19 கொரோனா நோயாளிகள்: மருத்துவமனையில் சுஷாந்த் பாடலுக்கு நடனமாடி கொண்டாட்டம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சுஷாந்த்சிங் பாடலுக்கு நடனம் ஆடி ஆட்டம் போட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் மருத்துவமனையில் மன அழுத்தத்துடன் இருப்பதாகவும், அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டாலே பாதி நோயில் இருந்து குணமாகிவிடுவார்கள் என்று மருத்துவர்களும், கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் கட்னி என்ற நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 19 பேருக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பதும், அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர்கள் அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்து உள்ளது. இதனை அடுத்து அவர்கள் வீடு திரும்பும் போது அவர்களில் சிலர் சுஷாந்த் சிங் பாடலுக்கு ஆட்டம் போட்டு நடனமாடிய காட்சியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

மேலும் அந்த குடும்பத்தினர் சிகிச்சை பெற்று வந்த நேரத்திலும் சீட்டுக்கட்டு, கபடி ,கிரிக்கெட், ஸ்கிப்பிங் போன்ற விளையாட்டுகளை விளையாடி கொரோனா வார்டையே ஜாலியாக வைத்திருந்தார்கள் என்றும் இதனால் நோயாளிகள் தாங்கள் மருத்துவமனையில் இருப்பதையே மறந்து புத்துணர்வு பெற்றார்கள் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் பார்த்துக்கொண்டாலே அவர்கள் விரைவில் குணமாகி விடுவார்கள் என்பதற்கு இந்த குடும்பமே ஒரு உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கொரோனா வார்டை ஒரு மருத்துவமனை போல் பார்க்காமல், ஒரு பிக்னிக் ஸ்பாட் போல் மாற்றி அவர்களுக்கு உற்சாகமான விஷயங்களை சொல்லிக் கொடுத்தாலே கொரோனாவில் இருந்து அவர்கள் மீண்டுவிடுவார்கள் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

More News

சர்வாதிகாரத்தின் உச்சம்- உணவுப் பற்றாக்குறையைத் தவிர்க்க செல்லப்பிராணிகளைக் கொல்லும் வடகொரியா!!!

உலகத்திலேயே மிகவும் மர்மமான நடவடிக்கைகளைக் கொண்ட நாடான வடகொரியா தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை நாட்டு மக்களிடம் வெளியிட்டு இருக்கிறது

ஆத்தா மதுரை மீனாட்சிய வேண்டுகிறேன்: எஸ்பிபி குறித்து நடிகர் சூரி

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவர் விரைவில் குணமாக வேண்டுமென்று

அமைச்சர் விஜயபாஸ்கர், மனைவி, மகளுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே.

முறுக்கு மீசை, வெண் தாடி: பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமலின் லுக் இதுதான்

விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது என்பதும்

கொரோனா பாதிப்பில் கடந்த 14 நாட்களாக இந்தியாதான் டாப்!!! அதிர்ச்சி தகவல்!!!

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 55,076 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக இந்தியச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.