பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் மருத்துவமனை கண்ணாடியை உடைத்த கொரோனா நோயாளி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வந்த போதிலும் தமிழக அரசு ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து முடிந்தவரை கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தி வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது குடும்பத்தினர்கள் கூட பார்க்க அனுமதிப்பதில்லை என்பது குறிப்படத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டதால் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 27 வயது இளைஞர் ஒருவர் தன்னுடைய வீட்டில் இருந்து வந்த பிரியாணியை சாப்பிட மருத்துவர்கள் அனுமதிக்காததால் ஆத்திரமடைந்தார். இதனையடுத்து அவர் ஆத்திரத்தில் மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவும் பகலும் மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் நர்சுகளும் சாப்பிட கூட நேரமின்றி பணிபுரிந்து வரும் நிலையில் பிரியாணி சாப்பிட அனுமதிக்கவில்லை என்பதால் அந்த இளைஞர் மருத்துவமனை கண்ணாடியை உடைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

சென்னையில் பெண் மருத்துவருக்கு கொரோனா; மருத்துவமனையை சீல் வைக்க முடிவா?

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வரும் நிலையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 77 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது

5 லட்சத்தை தாண்டிய கொரோனா நோயாளிகள்: உச்சகட்டத்தை அடைந்தது அமெரிக்கா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

கமல் வீட்டில் பால்கனி இல்லையா? ரங்கராஜ் பாண்டே கேள்விக்கு ஸ்ரீப்ரியா பதிலடி

சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலக நாயகன் நடிகருமான கமல்ஹாசன், திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது குறித்து பிரதமர் மோடியை விமர்சனம்

ஊரடங்கு உத்தரவு எதிரொலி: பெங்களூரில் வேலையிழந்த 496 ஐடி ஊழியர்கள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக தின தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தொழிலாளர்கள் வேலையின்றி வருமானமின்றி பசியும் பட்டினியுமாக இருக்கும் நிலையில்,

1400 கிமீ ஸ்கூட்டியை அடுத்து 130 கிமீ மனைவியை சைக்கிளில் அழைத்து சென்ற முதியவர்

ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியூரில் தவித்த மகனை 1400 கிமீ ஸ்கூட்டியில் அழைத்து வந்த வீரத்தாய் குறித்த செய்தியை காலையில் பார்த்தோம்.