close
Choose your channels

கொரோனா பரவல்; உடலுறவு கொள்வது பாதுகாப்பனதா??? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்???

Wednesday, April 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா பரவல்; உடலுறவு கொள்வது பாதுகாப்பனதா??? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்???

 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில் பலநாடுகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்யாவசியப் பொருட்களை மட்டும் வாங்குவதற்கு வெளியே செல்லுங்கள் என ஒவ்வொரு நாடும் மக்களுக்கு அறிவுத்தி வருகின்றனர். அப்படி வெளியே சென்று பொருட்களை வாங்கிவரும் போது, அத்யாவசிய பொருட்களில் ஒன்றாக ஆணுறையும் சேர்ந்து கொண்டுள்ளது. உலகம் முழுவதும் E-commerce வலைத்தளங்களில் அதிகமாக ஆணுறைகள் விற்பனை ஆகிவருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்தியாவிலும் கடந்த வாரங்களில் அதிகளவு ஆணுறைகள் விற்று தீர்ந்ததாக செய்திகள் வெளியாகின.

தற்போது, கொரோனா வைரஸ் தொற்று பரவல் நேரத்தில் உடலுறவு கொள்வது பாதுகாப்பனதா என்பதைக் குறித்தும் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. காரணம் உடலுறவு கொள்வதன் மூலம் நோய்த்தொற்று வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதைக் குறித்து ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில் இதுபோன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. கொரோனாவிற்கு மட்டுமல்ல இதுவரை உலகில் பரவிய எந்த நோய்த்தொற்றுக்கும் உடலுறவு கொள்ளாமல் இருப்பது எந்தவகையில் பயனைத்தரும் என்பதைக்குறித்து இன்னும் ஆய்வுசெய்யப்படவில்லை.

தற்போது Forbes வெளியிட்டு இருக்கும் செய்தி ஒன்றில் சமூக விலகலில் ஒன்று உடலுறவு எனக் குறிப்பிட்டு இருக்கிறது. மற்ற மனிதர்களிடமிருந்து உடல் ரீதியாகவும் ஒதுங்கியிருங்கள். கடுமையான சுவாச கோளாறு அறிகுறிகள் மற்றும் சளி, இருமல் நோய்த்தொற்று இருப்பவர்களிடம் இருந்து எப்போதும் தள்ளியே இருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் தடுப்புக்கு இதுவரை எந்த தடுப்பு மருந்துகளும் சந்தைக்கு வராதநிலையில் உடல் முழுவதும் போர்த்திக் கொள்ளும்வகையில் எந்த உறைகளும் இதுவரை உருவாக்கப்படவில்லை. எனவே மக்கள் தாமாகவே பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

உடலுறவால் வைரஸ் பரவாது

New York City Department of Health (NYDOH) தற்போது இதற்கு சில வழிமுறைகளை கூறியிருக்கிறது. கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு 6 அடி சுற்றளவில் பரப்பும் சக்தி கொண்டது. மேலும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து நீர்த்துளிகள் வெளியேறுவதன் மூலம் மற்றவருக்கு வைரஸ் பரவுகிறது. ஆனால் ஒருவரின் விந்து அல்லது யோனி திரவத்தின் மூலம் கொரோனா வைரஸ் கடத்தப்படுவது இல்லை எனத் தெரிவித்து இருக்கிறது. கொரோனா SARS CoV-2 வைரஸ் தவிர கொரோனா குடும்பத்தில் உள்ள எந்த வைரஸ் மும் விந்து அல்லது யோனி திரவத்தின்மூலம் பரவுவது இல்லை எனத் NYDOH தெரிவித்து இருக்கிறது.

எச்சரிக்கைகள்

உங்களது இணையர், மனைவி வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாதவர் என்ற வகையில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தெரியாத, அறிமுகம் இல்லாத புது நபர் என்பது மிகவும் ஆபத்தானது எனவும் NYDOH எச்சரித்துள்ளது. மேலும் எல்லா நேரங்களிலும் முத்தமிட்டு உங்கள் அன்பை தெரிவிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. உமிழ்நீர் பரிமாறப்படாத வகையில் உறவில் ஈடுபடுவது நல்லது எனவும் குறிப்பிட்டு இருக்கிறது. இதுபோன்ற கொள்ளை நோய் பரவும் நேரங்களில் சுயஇன்பம் மிகவும் பாதுகாப்பனது என்பதையும் NYDOH அறிவுறுத்துகிறது. ஆனால் இந்த வழிமுறைகளிலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.

மேலும், உடலுறவு கொள்ளும் நபர் உங்கள் துணையாக இருந்து அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்றாலும் முகமூடிகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது. காரணம் கொரோனா பரவலுக்கு முதல் காரண இருப்பது நீர்த்துளிகள். எனவே கொரோனா பாதிப்பு இல்லையென்றாலும் முகமூடி அவசியம் என்று NYDOH கூறுகிறது. அறுவை சிகிச்சை முகமூடிகள் தளர்வான தன்மையுடன் இருக்கும். எனவே இதுமாதிரியான சமயங்களில் N95 முகமூடிகள் பயன்படுத்துவதே சிறந்தது எனவும் தெளிவுபடுத்தி இருக்கிறது.

ஆசனவாய் போன்ற பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று கிருமிகள் இருப்பதற்கு வாய்ப்புண்டு. எனவே கூடுமான வரை ஆணுறைகளை பயன்படுத்துவதும் நல்லது என NYDOH வலியுறுத்துகிறது. இந்த நேரங்களில் தேவையில்லாத புதுவகை அனுபவத்தை பெறுகிறேன் விபரீதத்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் NYDOH எச்சரிக்கை செய்கிறது.

யார் எல்லாம் செய்யக்கூடாது

நுரையீரல் நோய், இருதய நோய், புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் உடலுறவில் இருந்து விலகியிருப்பதே நலம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது தேவையில்லாமல் பிரச்சனையை வரவழைத்துவிடக்கூடாது என்பதற்காக இந்த விலகல் அவசியம். மேலும், சளி, இருமல், காய்ச்சல், சுவாசப் பிரச்சைகள் போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் அவர்களை விட்டு விலகி இருப்பது நல்லது. இத்தனை எச்சரிக்கைகளும் உங்களை உடலுறவு கொள்ளவேண்டாம் என்ற பீதியை ஏற்படுத்துவதற்கு மட்டும் சொல்லப்படவில்லை. அதிதீவிரமாக கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் நோய்த்தொற்று யாருக்கும் இருக்கிறது யாருக்கு இல்லை என்ற தெளிவில்லாமல் பிரச்சனையை தானாகவே பெற்றுக்கொள்ள கூடாது என்பதற்காக இந்த அறிவுரைகளை NYDOH குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த வழிமுறைகளைப் பின்பற்றும்போது கொரோனா தொற்றினை சிறிய வட்டத்திற்குள் மட்டுப்படுத்தி விட முடியும் எனவும் NYDOH எனவும் குறிப்பிட்டுக் காட்டுகிறது. கொரோனா நோய்த்தொற்று ஒருபக்கம் உலகையே அச்சுறுத்தி வந்த நேரத்தில் டேட்டிங் செய்வதற்கான உருவாக்கப்பட்ட இணையதளங்கள் உலகம் முழுவதும் படுவேகமாக இயங்கிவருவதாக ஒரு ஆய்வு குறிப்பிட்டு காட்டுகிறது. எனவே பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

கொரோனா வைரஸ் உடலுறவு கொள்வதன் மூலம் பரவுமா என்பது குறித்து இன்னும் ஆய்வுகள் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் கொரோனா நோய்த்தொற்று நேடியாக சுவாச உறுப்புகளை தாக்கவல்லது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்றிக்கொள்ளும் அபயாம் இருக்கிறது. எனவே சாதாரணமாகக் கூட முத்தமிடுவதைத் தவிர்க்க வேண்டும். பிரான்ஸ் போன்ற நாடுகள், கன்னத்தில் முத்தமிடுவது, வாழ்த்து சொல்வதற்காக கன்னங்களை உரசிக்கொள்வது போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும், NYDOH குறிப்பிட்ட வழிமுறைகளில் மிகவும் முக்கியமானது உடலுறவுக்கு முன்னும் பின்னும் சுகாதாரமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கிருமிநாசினி தன்மையுள்ள சோப் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி உடலை முழுவதுமாகச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.