'ரேகை பாக்கலையோ ரேகை': கைரேகை ஜோஸ்யகாரரால் 13 பேர்களுக்கு பரவிய கொரோனா

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் கொரோனா நோயை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக மிகவும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புதுவையில் ஒரு கைரேகை ஜோதிடரால் 13 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவிய சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இது குறித்து புதுவை கவர்னர் கிரண்பேடி அவர்கள் கூறியபோது ’புதுச்சேரியில் வீடு வீடாக சென்று கைரேகை பார்க்கும் ஜோதிடர் ஒருவரால் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளதாகவும் அவர் வழங்கிய பிரச்சாரத்தின் காரணமாகவே கொரோனா பரவியதாகவும் தெரிவித்துள்ளார். 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த கைரேகை ஜோதிடர், முறைப்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ளாமல் அவராகவே வீட்டில் சிகிச்சை எடுத்து கொண்டதால் அவரை சார்ந்தோர்களுக்கும் கொரோனா தொற்று பரவ காரணமாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

புதுவையில் பெரும்பாலும் மதுபான விருந்துகள் நடக்கும் இடம், வீடுகளில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சிகளின் மூலம் தான் கொரோனா அதிகம் பரவுவதாகவும், எனவே பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் புதுவை கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.

More News

போலீஸாரையே கொன்ற ரவுடிகள்: துரத்தி துரத்தி வேட்டையாடிய காவல் துறை!!! கருவறுத்த பரபரப்பு சம்பவம்!!!

கடந்த வெள்ளிக்கிழமை உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் அடுத்த பிக்ரு பகுதியில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீஸாரை பிரபல ரவுடிகள் சுட்டுக் கொன்றனர்.

திருமணத்திற்கு பின் நாங்கள் நடிக்க கூடாதா? கேள்வி எழுப்பிய அஜித் பட நடிகை!

திருமணத்திற்குப் பின்னர் அனைத்து மாஸ் நடிகர்களும் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் திருமணத்திற்கு பின்னர் பெரும்பாலான நடிகைகள் நடிப்பதில்லை

இந்த நான்கு பேர்களும் எனது தெய்வங்கள்: ரஜினிகாந்த் வீடியோ

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் 90 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரை உலகில் உள்ள அனைவரும் கே பாலசந்தர்

நாய்க்கறிக்கு தடை விதித்த மாநில அரசு!!! போர்க்கொடி தூக்கிய மக்கள்!!!

நாகலாந்தில் பூர்வக்குடி மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அம்மாநில இறைச்சி விற்பனையில் நாய்களின் இறைச்சி முக்கிய இடத்தைப் பிடித்து இருக்கிறது.

அமைச்சரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பிரதமர் உயிரிழப்பு!!! அதிர்ச்சி ஏற்படுத்தும் பரபரப்பு சம்பவம்!!!

ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் அந்நாட்டின் அமைச்சரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு வீடு திரும்பியதும் உயிரிழந்து உள்ளார்.