10 நிமிடத்துக்கு ஒருவர் பலி.. கொரோனாவால் திணறும் ஈரான்..!

ஈரானில் 10 நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பதாக ஈரான் சுகாதாரத் துறை செய்தி தொடர்பாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் 170 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸானது ஈரானிலும் இத்தாலியிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 3400 பேரும் ஈரானில் 1300 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரான் நாட்டின் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஈரான் நாட்டில்10 நிமிடத்திற்கு ஒருவர் கொரோனா தொற்றால் இறக்கிறார். 1 மணி நேரத்திற்கு 50 பேர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியில் வராமல் இருப்பது நல்லது என தெரிவித்துள்ளார்.

More News

ஜின் தயாரிப்பை நிறுத்திவிட்டு கைகழுவும் சானிடைசர் தயாரிக்கும் கிரிக்கெட் வீரர்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தனக்கு சொந்தமான மதுபான ஆலையில் மதுபானங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டு கை கழுவும் சானிடைஸர்கள் தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளார்.

இந்த நேரத்தில் பணம் சம்பாதிப்பது முக்கியமல்ல: ரித்விகா

கொரோனா குறித்த விழிப்புணர்வை கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகை ரித்விகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கொரோனா விழிப்புணர்வு குறித்த ரஜினியின் வீடியோ

கொரோனா வைரஸ் பீதியால் இந்தியாவே அச்சம் கொண்டிருக்கும் நிலையில் நாளை ஒரு நாள் சுய ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்

விடுமுறையல்ல இது.. ஆபத்து.. என்ன சொன்னாலும் மக்கள் புரிந்து கொள்ளவில்லை..! விஜய பாஸ்கர்.

இத்தாலியிலும் இதே போலத்தான் மக்கள் இதை சாதாரண காய்ச்சலாக நினைத்தனர். ஆனால் 2 வாரங்கள் கழித்து கொரோனா தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியது.

கொரோனாவில் இருந்து தப்பிக்க பொருட்களை எப்படி கையாள்வது???

கொரோனா வைரஸ் பொருட்களின்மீது பல மணிநேரம் குடியிருக்கும் தன்மையுடையது என ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன.