கொரோனா தடுப்பு நடவடிக்கை!!! தமிழ்நாட்டிலும் பயன்பாட்டுக்கு வந்த ரோபோக்கள்!!!

  • IndiaGlitz, [Friday,April 03 2020]

 

கோரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தன்மைக் கொண்டது. எனவே கொரோனா நோய்த்தொற்றை பரிசோதனை செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கும் உலக நாடுகள் முழுக்க பல இடங்களில் ரோப்பக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. அமெரிக்காவில் பல பூங்காக்கள் மற்றம் பொது இடங்களில் கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா எனப் பரிசோதிப்பதற்கு பல ரோபோக்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. தற்போது தமிழகத்திலும் ரோபோக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு இந்த ரோப்பாக்கள் தான் உணவுப்பொருட்களை வழங்கிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இருந்து தள்ளியிருப்பதற்கு இது சிறந்த வழிமுறையாக இருக்கிறது எனப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஸ்டான்லி மருத்துவமனையில் ரோபோக்கள் சேவையை தமிழ்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.