close
Choose your channels

எண்டெமிக்.. எபிடெமிக்.. பாண்டமிக்.. அப்படினா என்னனு தெரியுமா..?! #COVID19pandemic

Thursday, March 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எண்டெமிக்.. எபிடெமிக்.. பாண்டமிக்.. அப்படினா என்னனு தெரியுமா..?! #COVID19pandemic

இன்று உலக சுகாதார நிறுவனமானது கொரோனா வைரஸினை உலகமுழுக்க பரவியுள்ள பெருந்தொற்று நோயாக(pandemic) அறிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனமானது உலகில் உருவாகும் நோய்களை எண்டெமிக், எபிடெமிக், பாண்டெமிக் என மூன்று வகையாக பிரித்து வைப்பது வழக்கமாகும்.

என்டெமிக் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே ஏற்படும் தொற்று நோயாகும். மற்ற பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த பகுதிக்குச் சென்றால் அந்த நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். மற்றபடி அந்த நோய் வேறு பகுதிகளுக்கு பெரிதாக பரவியிருக்காது. எடுத்துக்காட்டாக ஆப்பிரிக்க பகுதிகளில் எப்போதும் பெரும் பிரச்சனையாக இருக்கும் மலேரியா. இது உலகின் வேறு பகுதிகளில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை.

அதேபோல் எபிடெமிக் என்பது பல மக்களை ஒரே நேரத்தில் தொற்றும் நோயை குறிப்பதாகும். அதே நேரம் இந்த வகை நோயானது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இருக்காமல் பல சமுதாய மக்களுக்கும் ஏற்படும். இதற்கு எடுத்துக்காட்டு சிக்கன்குனியா, காலரா, எபோலா போன்றவை ஆகும்.

பாண்டெமிக் என்பது எபிடெமிக் நோய் உலகம் முழுவதும் பரவியுள்ளதினைக் குறிக்கும். மிகச் சமீபமாக 2009ல் வந்த பன்றிக்காய்ச்சலானது பாண்டெமிக் வகை நோயாகவும் . இது உலகம் முழுவதும் பரவி இருந்தது. மேலும் பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதற்கு முன்னும் பல பாண்டெமிக் நோய்கள் பரவியுள்ளன. எயிட்ஸ் ஒரு பாண்டெமிக் நோயாகும். இது 2005 முதல் 2012 வரை உலகமுழுவதுமுள்ள மக்களிடையே மிக விரைவாக பரவியது. இதுவரை எயிட்ஸால் 7.5 கோடி பேர் பாதிக்கப்பட்டு 3 கோடியே 20 லட்சம் பேர் இறந்துள்ளனர். அதன் பிறகு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்றும் நம்மிடம் மருந்து இல்லை.

உலகமானது இது போல் பல பெருந்தொற்று நோய்களைக் கண்டுள்ளது. அதனால் பயம் தேவையில்லை. 1918-ல் H1N1 வைரஸால் ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு உலகமுழுக்க பரவியது. கிட்டத்தட்ட 5 கோடி போர் அந்நோயால் இறந்தனர். 1957-ல் ஏசியன் ஃப்ளூ சிங்கப்பூரில் தொடங்கி உலகமுழுக்க பரவி 11 லட்சம் பேரை பலியாக்கியது. 1968-ல் ஹாங்காங் ஃப்ளூ இந்நோய் ஆசியா,ஐரோப்பா என பரவியது. வியட்நாமில் போருக்காக வந்த அமெரிக்க வீரர்கள் இதனால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவிலும் இந்த நோய் பரவி உலகில் 5 லட்சம் பேர் இறந்தனர்.14ம் நூற்றாண்டில் வந்த பிளேக் நோய்க்கு 20 கோடி பேர் இறந்துள்ளார்கள். 19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டிலும் பரவிய காலரா நோய்க்கு 18 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

உலக சுகாதார நிறுவனமானது சில அறிவுரைகளை உலக நாடுகளுக்கு வழங்கியுள்ளது. அவை,
1. உடனடியாக சிகிச்சை தரும் முறையை தரம் உயர்த்த வேண்டும்.
2. மக்களிடம் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள எடுத்துரைக்க வேண்டும்.
3. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு COVID19 தொற்று உள்ளவர்களை மிக தனிமைப்படுத்தி சோதனைக்கு உள்ளாகி சிகிச்சையளிக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.