close
Choose your channels

15 வயது சென்னை சிறுவனுக்கு கொரோனா? அதிர்ச்சி தகவல்

Sunday, March 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீனாவில் உள்ள வூகான் என்ற மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதும் பரவி சுமார் 2 ஆயிரம் உயிர்களை பலி வாங்கியுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சீனா மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலும் பரவியது

இந்தியாவில் சுமார் 30 பேர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா வைரஸ் நேற்று முதல் பரவி உள்ளது. நேற்று ஓமனில் இருந்து தமிழகத்துக்கு வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இன்று அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து அந்த சிறுவன் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்து வருவதாகவும் அந்த சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.