'தெறி', 'விஜய் 60' படங்களுடன் கனெக்ஷன் ஆன சசிகுமாரின் 'கிடாரி'

  • IndiaGlitz, [Saturday,June 04 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' மற்றும் தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் 'விஜய் 60' ஆகிய இரண்டு படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் சத்யா என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி கோலிவுட்டில் பிரபல நட்சத்திரங்களான ஜெயம் ரவி, ஜீவா, தனுஷ், நஸ்ரியா, சிவகார்த்திகேயன் உள்பட பலருக்கு காஸ்ட்யூம் டிசைனராக இவர் பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில் காஸ்ட்யூம் டிசைனர் சத்யா தற்போது நடிகராக மாறியுள்ளார். ஆம் 'வெற்றிவேல்' படத்தை அடுத்து சசிகுமார் தற்போது நடித்து வரும் 'கிடாரி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவலை சத்யா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
சசிகுமார், நிகிலா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை பிரசாந்த் முருகேசன் இயக்கி வருகிறார். சசிகுமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

More News

விஜய்க்கு என் கதை செட் ஆகவில்லை. கார்த்திக் சுப்புராஜ்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து விஜய்யின் 60வது படத்தை இயக்க பலத்த போட்டி இருந்தது...

'ஒருநாள் கூத்து' எதை குறிக்கின்றது. இயக்குனர் நெல்சன் விளக்கம்

அட்டக்கத்தி தினேஷ் நடித்துள்ள 'ஒருநாள் கூத்து' வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்கிய புதுமுக இயக்குனர் நெல்சன்...

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' சென்சார் தேதி

இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக சவாரி செய்து வரும் ஜி.வி.பிரகாஷ்...

'ரெமோ'வில் இணைந்த தனுஷ் பட பாடகர்

தனுஷ் நடித்த அனேகன்' படத்தில் இடம்பெற்ற 'தங்கமாரி ஊதாரி' பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியது...

சுந்தர் சியின் 'முத்தின கத்தரிக்கா' ரிலீஸ் தேதி

சுந்தர் சி நடிப்பில் அவருடைய உதவியாளர் வெங்கட்ராகவன் இயக்கிய 'முத்தின கத்தரிக்கா' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில்...