பாதுகாப்பு கேட்டு நீதிமன்றம் சென்ற மணமக்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி!

  • IndiaGlitz, [Wednesday,June 03 2020]

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மணமக்கள் தங்களுடைய திருமணத்தை ஒரு சிலர் எதிர்ப்பதாகவும், அவர்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு தாக்கல் செய்த மணமக்களுக்கு ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் திருமணமான தம்பதிகள் தங்களுடைய திருமணத்துக்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றும் அவர்களிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவுடன் தங்களுடைய திருமணம் நடந்த புகைப்படங்களையும் அவர்கள் இணைத்துள்ளனர்

இந்த புகைப்படத்தை பார்த்த நீதிபதி திருமணத்தின் போது மணமக்கள் இருவரும் மாஸ்க் அணியாமல் இருப்பதும் திருமணத்திற்கு வந்த யாருமே மாஸ்க் அணியாமல் இருப்பதையும் பார்த்தார். உடனடியாக கொரோனா வைரஸ் காலகட்டத்தில் அரசின் வழிமுறைகளை கடைபிடிக்காமல் மாஸ்க் அணியாமல் திருமணம் செய்ததற்காக இந்த புதுமண தம்பதிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும், இந்த பணத்தை அவர்கள் 15 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் இந்த பணத்தை மாஸ்க் வாங்க செலவு செய்து அந்த மாஸ்க்கை ஏழை எளிய மக்களுக்கு வழங்கிடவும் உத்தரவிட்டார்

மேலும் இந்த தம்பதிகளுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கும்படியும் பஞ்சாப் மாநில போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

முகத்தில் துப்பிய 'பிகில்' நடிகைக்கு பதிலடி கொடுத்த காமெடி நடிகர்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'பிகில்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தவர்கள் கூட மிகப் பெரிய

இனவெறிதான் மிகப்பெரிய வைரஸ், அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க வில்லை – ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி காட்டம்!!!

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜார்ஜ் க்ளூனி “இனவெறிதான் மிகப்பெரிய வைரஸ், கடந்த 400 ஆண்டுகளாக இன்னும் மருந்து கண்டுபிடிக்க வில்லை” என்று காட்டமாக கருத்துத் தெரிவித்து இருக்கிறார்.

கார்த்திக் நரேன் பெயரில் மோசடி: திடுக்கிடும் தகவல்

'துருவங்கள் பதினாறு' என்ற முதல் படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகையே தன் பக்கம் திரும்ப வைத்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன் என்பது தெரிந்ததே.

மகளுடன் எடுத்த புகைப்படத்தை மார்பிங் செய்து அம்மாவுக்கு அனுப்பிய வாலிபர் கைது!

https://tamil.asianetnews.com/crime/kanniyakumari-youth-arrested-for-sharing-women-personal-photos-and-videos-in-social-media-qbc99e

உலகில் மிகச்சிறந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிதான் – இப்படி சொன்னவர் நம்ம ரொனால்டோ!!!

கால்பந்து போட்டிகளில் ஜாம்பவனாகத் திகழும் பிரேசில் வீரர் ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி யை உலகில் மிகச்சிறந்த கால்பந்து வீரர் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்