விருந்தில் கலந்துகொண்ட புலியால் அதிரும் சோஷியல் மீடியா!

  • IndiaGlitz, [Wednesday,October 13 2021]

துபாயில் தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என உறவினர்களுக்கு அறிவிக்கும் விழாவினை ஒரு தம்பதியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவில் உண்மையான புலி கலந்துகொண்டு பலூனை தட்டிவிட்டு குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

இந்தியாவில் குழந்தைப் பிறப்பின்போது ஆணா? பெண்ணா? என்ற பாகுபாடு இன்றைக்கு வரைக்கும் நீடிக்கத்தான் செய்கிறது. ஆனால் சில வெளிநாடுகளில் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? எனத் தெரிந்து கொள்வதற்குப் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தச் செய்தியை தங்களது உறவினர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு தம்பதியினர் விருந்து வைத்து கொண்டாடவும் செய்கின்றனர்.

அந்த வகையில் துபாயிலுள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில், அதே ஹோட்டலில் பராமரிக்கப்படும் புலியும் கலந்து கொண்டது. மேலும் குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் பொருட்டு அந்த விழாவில் பறக்கவிடப்பட்ட பலூனையும் அந்த புலி எட்டிப்பிடித்து உடைத்தது. இதனால் விழாவில் கலந்து கொண்ட அனைவரும், உற்சாகமாகக் காட்சியளித்த புலியைப் பார்த்து பிரமித்து போயினர்.

இந்நிலையில் விருந்து நிகழ்ச்சியில் புலி கலந்துகொண்ட வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் புலியை வைத்து விருந்து நிகழ்ச்சி நடத்துவதா என்று சமூகநல ஆர்வலர்கள் சிலர் கடும் விமர்சனத்தை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

2 டோஸ் தடுப்பூசி போட்டும் பிரபல நடிகைக்கு 2-ஆவது முறையாக கொரோனா!

தெலுங்கு திரைப்படங்களில் வளர்ந்துவரும் நடிகையாக இருப்பவர் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்.

மென்டர் பதவிக்கு தோனி வாங்கும் சம்பளத்தைப் பார்த்து வியந்துபோன ரசிகர்கள்!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகிவிட்ட தல தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பங்கேற்று விளையாடி வருகிறார்.

விஷாலின் 32, 33, 34வது படங்கள் குறித்த தகவல்கள்!

விஷால் நடித்து முடித்துள்ள 31வது திரைப்படமான' எனிமி' திரைப்படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

'பீஸ்ட்' நாயகியின் பிறந்த நாளில் வெளியான சூப்பர் போஸ்டர்! ரசிகர்கள் குஷி!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. 

இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக 'சிங்கம்' லொகேஷனுக்கு செல்லும் 'யானை' படக்குழு!

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'யானை'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது