நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை: நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Saturday,June 17 2017]

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட ஸ்வாதியின் வழக்கு, முறைப்படி இன்று நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பை இன்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி, சூளைமேடு சௌராஷ்டிரா நகரைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஸ்வாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் என்பவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில், கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அதே ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி புழல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். சிறையில் மின்சார வயரை கடித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் ராம்குமாரின் குடும்பத்தினர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஸ்வாதி கொலை வழக்கின் முழு அறிக்கையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் சமர்பிக்கப்பட்டதாக இந்த வழக்கின் விசாரணை அதிகாரி செய்தியாளர்களிடம் சற்று முன்னர் தெரிவித்தார். இதனை விசாரித்த நீதிபதி பிசி கோபிநாத், வழக்கு முறைப்படி முடித்து வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஸ்வாதி கொலை வழக்கு என்ற பெயரில் திரைப்படம் ஒன்று எடுக்கப்பட்டு அதன் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஸ்வாதியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

More News

குடியரசு தலைவராக மீண்டும் ஒரு விஞ்ஞானி?

இந்திய குடியரசு தலைவர்களில் பெஸ்ட் யார் என்று கேட்டால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது அப்துல்கலாம் அவர்கள் தான். முதன்முறையாக ஒரு விஞ்ஞானி, எந்த கட்சியையும் சார்பில்லாத ஒரு குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நாடே பெருமை அடைந்தது...

தமிழர் அல்லாதவர் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? கஸ்தூரியின் நெத்தியடி கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்த நடிகை கஸ்தூரி பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்...

இந்தியா-பாகிஸ்தான் ஃபைனல்: பணமழையில் நனையும் தனியார் சேனல்

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் அதை ஒரு போட்டியாக பார்க்காமல் போராக பார்க்கும் மனப்பான்மை கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது...

அரவிந்தசாமி பிறந்த நாளில் 'இரட்டை விருந்து'

'தனி ஒருவன்', 'போகன்' வெற்றி படங்களை அடுத்து நடிகர் அரவிந்தசாமி தற்போது 'சதுரங்க வேட்டை 2', 'வணங்காமுடி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல், மற்றும் 'நரகாசுரன்' ஆகிய படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

கமல் 'சத்யா' போன்றே சிபிராஜ் 'சத்யா'வும் வித்தியாசமாக இருக்கும். சத்யராஜ்

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள சத்யா' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் நடிகரும் சிபிராஜின் தந்தையுமான சத்யராஜ் இந்த படம் குறித்து ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.