தடுப்பூசிகள் உருமாறிய கொரோனாவை சாகடிக்குமா? ஐசிஎம்ஆர் சொல்வது என்ன?

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதியில் இருந்து கோவேக்சின், கோவிஷீல்டு எனும் இரு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசிகள் இரண்டும் கொரோனாவின் முதல் அலையின் போது உருவாக்கப்பட்டு அதே மரபணுவில் வைத்து சோதிக்கப்பட்டவை.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் பி.1617 எனும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனால் கடந்த முதல் அலையில் இருந்ததைவிட 10 மடங்கு அதிகம் பரவி வருவதாகவும் ஐசிஎம்ஆர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ்க்கு எதிராக தற்போது செலுத்தப்பட்டு வரும் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் எந்த அளவிற்கு வேலை செய்யும் என்பது குறித்த ஆய்வுகளை ஐசிஎம்ஆர் மேற்கொண்டு இருக்கிறது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐசிஎம்ஆர் தற்போது செலுத்திவரும் கொரோனா தடுப்பூசிகள் புதிய உருமாறிய கொரோனவிற்கு வெறும் 50% மட்டுமே பலன் அளிக்கும். ஆனாலும் கொரோனா தடுப்பூசி விநியோகத்தை ஒருபோதும் நிறுத்தக் கூடாது. காரணம் பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசிகள் பரவலைத் தடுக்க ஒரு பேராயுதமாகவே செயல்பட்டு வருகிறது. மேலும் தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் அனைத்தும் கொரோனவிற்கு எதிரான ஆன்டிபாடிகளை உடலில் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் செலுத்தப்படுகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்து உள்ளார்.

இதனால் தற்போது பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசிகள் அனைத்தும் சற்று செயல்திறன் குறைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவைத் தவிர பிரேசில் பி-2, அமெரிக்கா பி.1.17, தென் ஆப்பிரிக்கா பி.1351 போன்ற உருமாறிய கொரோனாவிலும் தடுப்பூசிகள் வேலை செய்யுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.