கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவர் நல்லக்கண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,March 30 2021]

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லக்கண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர்போன இவருக்கு தற்போது 95 வயதாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நல்லக்கண்ணு அவர்கள் கடந்த சில தினங்களாக தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிச் செய்யப்பட்டு உள்ளது.

இதனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு நுரையீரலில் லேசான பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் வயது மூப்பு காரணமாக மிகவும் கவனத்துடன் நல்லக்கண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குறைந்து இருந்த கொரோனா தொற்று தற்போது உச்சத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களுக்கும் தற்போது கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை நடிகர் அமீர்கான், மாதவன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரைத் தொடர்ந்து மூத்த அரசியல் கட்சித் தலைவர் நல்லக்கண்ணுவிற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

More News

இன்னொரு இனப்போருக்கு தயாரான மியான்மர்? இதுவரை 500 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்!

இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு விவகாரத்திற்கு உலக நாடுகள் பலவும் இன்றுவரை குரல் எழுப்பி வருகின்றன.

ஆயிரம் விளக்கில் தொகுதியில் அசர வைக்கும் குஷ்புவின் பிரச்சாரம்!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் குஷ்புவின் பிரச்சார பாணியே வித்தியாசமாக இருப்பதை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அசந்து போய் உள்ளனர்.

10கிமீ வேன் ஓட்டி வந்த நடிகை கவுதமி...! இதெல்லாம் பாஜக முருகனுக்காகவாம்...!

தாராபுரத்தில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனை ஆதரித்து, நடிகை கவுதமி 10கிமீ  வேன் ஓட்டி வந்து பிரச்சாரம் செய்தார்.

ஊடகங்களின் கருத்துகணிப்புகள் திரு. ரூபி மனோகரனின் வெற்றியை உறுதி செய்கிறது

தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாங்குநேரி தொகுதி வேட்பாளர் திரு.ரூபி மனோகரன்.

நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி… கணவர் கூறிய தகவல்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர் நடிகை ரோஜா. அவர் தற்போது ஆந்திர அரசியலில் ஒரு முக்கியமான அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார்.