close
Choose your channels

டிடிவி தினகரன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான தமிழ் நடிகை

Thursday, July 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகி திமுக, அதிமுக கட்சிகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். சமீபத்தில் இக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் அ.ம.மு.க கட்சியின் புதிய கொள்கை பரப்புச் செயலாளராக நடிகையும் அமமுக கட்சியின் பிரமுகருமான சி.ஆர்.சரஸ்வதியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமனம் செய்துள்ளார்.

கே.பாக்யராஜ் நடித்து இயக்கிய 'எங்க சின்ன ராசா' படத்தின் மூலம் நடிகையான சி.ஆர்.சரஸ்வதி அதன்பின்னர் பல திரைப்படங்களில் நடித்தார். 1999ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சி.ஆர்.சரஸ்வதிக்கு 2014ஆம் ஆண்டு அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பதவி கிடைத்தது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் தினகரன் அணியில் இணைந்த சி.ஆர்.சரஸ்வதிக்கு அமமுகவின் செய்தி தொடர்பாளர் பதவியை தினகரன் அளித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கிடைத்துள்ளது.

மேலும் சி.ஆர்.சரஸ்வதிக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவியளித்த தினகரன், பொருளாளராக வெற்றிவேலை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.