தனுஷ் பட நடிகையுடன் பிரபல கிரிக்கெட் வீரர் டேட்டிங்? வைரல் புகைப்படம்!

தனுஷ் நடித்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருடன் டேட்டிங் செய்திருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தனுஷ் நடித்த ‘அட்ராங்கி ரே’  என்ற திரைப்படம் உள்பட பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சாரா அலிகான். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலி கான் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான சுப்மன் கில் மற்றும் சாரா அலிகான் ஆகிய இருவரும் ஹோட்டல் ஒன்றில் சாப்பிடும்போது இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சுப்மன்கில், சாரா அலிகான் இருவரும் டேட்டிங் செய்வதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் #SaraAliKhan என்ற ஹேஷ்டேக்கில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சுப்மன்கில், சாரா அலி கான் ஆகிய இரு தரப்பிலிருந்தும் தங்கள் காதலை வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கிரிக்கெட் வீரர் விராத் கோலி  உள்பட பல கிரிக்கெட் பிரபலங்கள் பாலிவுட் நடிகைகளை திருமணம் செய்துள்ளனர் என்பதும் அந்த வரிசையில் சுப்மன் கில் - சாரா அலி கான் ஜோடி தம்பதிகளாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'தி லெஜண்ட்' திரைப்படம் இத்தனை கோடி லாபமா? சரவணன் வெளியிட்ட ஆச்சரிய தகவல்!

சரவணா ஸ்டோர் தொழிலதிபர் சரவணன் நடிப்பில் உருவான 'தி லெஜண்ட்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

திரையுலகில் இருந்து விலகுகிறாரா நயன்தாரா? இந்த ஒரே ஒரு காரணம் தானா?

லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாரா திரையுலகில் இருந்து விலக இருப்பதாகவும் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் என்றும் கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'வெந்து தணிந்தது காடு' டிரைலர் ரிலீஸ் விழாவில் ரஜினி இல்லையா? இந்த இரு விஐபி மட்டும் தான்!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக

காலை டிபன் செய்வதில் தகராறு.. மனைவி, தாய், மகள்கள் என 5 பேர்களை கொலை செய்த சைக்கோ!

காலை உணவு தயாரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது தாயார், மனைவி மற்றும் 3 மகள்களை கொலை செய்த சைக்கோ ஒருவருடைய செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை: கைதான பிரபலம் இவரா?

பிரபல நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது நெருங்கிய நண்பர் ஒருவரே கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.