பும்ராவை திருமணம் செய்யப்போவது இந்த தொலைக்காட்சி தொகுப்பாளியா?

  • IndiaGlitz, [Wednesday,March 10 2021]

தமிழ் நடிகை அனுபமா பரமேஸ்வரன் என்பவரை பிரபல கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் செய்யப் போவதாக வதந்திகள் கிளம்பிய நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் அனுபமா பரமேஸ்வரன் தாயார் இது குறித்து விளக்கம் அளித்தார்.

இதனை அடுத்து பும்ரா திருமணம் செய்யப்போவது யாரை? என்ற கேள்வி எழுந்து இருந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சஞ்சனா கணேசன் என்ற பெண் தான் பும்ராவை திருமணம் செய்யப் போவதாக கூறப்படுகிறது

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுப்பாளினியாக இருக்கும் சஞ்சனா கணேசன், கடந்த சில ஆண்டுகளாக பும்ராவை காதலித்ததாகவும், இதனையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது

பும்ரா - சஞ்சனா கணேசன் திருமணம் வரும் 14 அல்லது 15 ஆம் தேதி கோவாவில் நடைபெற இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் ஆகிய இருவர் தரப்பிலிருந்து இந்த திருமணம் குறித்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றும் விரைவில் இந்த திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

More News

சின்ன வயதில் 'அருவி' அதிதிபாலன்: புகைப்படங்களை பார்த்து ஆச்சரியப்படும் நெட்டிசன்கள்!

நடிகை அதிதி பாலன் நடிப்பில் இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் உருவான திரைப்படம் 'அருவி'. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நான்கு ஆண்டுகளாகியும்

டூப்பே இல்லாமல் அந்தரத்தில் டைவ் அடித்த இளம் நடிகை… வைரல் வீடியோ!

கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் “பேராண்மை”. இந்தப் படத்தில் அறிமுகமானவர் நடிகை சாய் தன்ஷிகா.

மிச்செல் ஒபாமா சொன்னது சரிதான்… முன்னணி நடிகையின் வைரல் ஸ்டேட்மெண்ட்!

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவின் கருத்தை எடுத்துக்காட்டி தமிழ் நடிகை ஒருவர் மகளிர் தினத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

'திரெளபதியின் முத்தம்': தனுஷின் 'கர்ணன்' படம் குறித்த சூப்பர் அப்டேட்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'கர்ணன்' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. கிராமிய பாடகி மாரியம்மாள் அவர்கள் பாடிய 'கண்டா

'டாக்டர்' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே.