close
Choose your channels

காதல் மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் தினேஷ் கார்த்திக்.. வைரல் புகைப்படங்கள்..!

Wednesday, February 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான சென்னையை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கின் மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

சென்னை சேர்ந்த தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் என்பதும் இவர் ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் அந்த குழந்தைகளுக்கு கபீர் மற்றும் ஜியான் என்ற பெயர் வைத்தனர்.

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் கடந்த 2008 ஆம் ஆண்டு டெல்லி அணியில் விளையாடிய நிலையில் அதன் பின்னர் அவர், பஞ்சாப், மும்பை, பெங்களூர், குஜராத், மற்றும் கொல்கத்தா அணியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.