விஜய்சேதுபதியிடம் இருந்து அதிகம் கற்று கொண்டேன்: பிரபல கிரிக்கெட் வீரர்!

  • IndiaGlitz, [Wednesday,September 22 2021]

விஜய் சேதுபதியிடம் இருந்து அதிகம் கற்றுக் கொண்டதாக பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது சுமார் பதினைந்து படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பதும், அவர் நடித்த 3 திரைப்படங்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட் என இந்திய திரையுலகில் பிசியான நடிகராக இருந்து வரும் விஜய் சேதுபதியை சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் நேரில் சந்தித்து உரையாடினார். இது குறித்த புகைப்படங்களை தனது சமூகத்தில் பதிவு செய்து ’உங்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்’  என்று பதிவு செய்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தடை சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது ஸ்ரீசாந்த் ஒரு சில ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்கிறார் என்பதும், ஒருசில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.